குழந்தை எடை குறைவாக (அ) அதிகமாக பிறப்பது ஏன் ?
பிறக்கும் குழந்தையின் எடையானது (birth weight) குறைந்தாலும் சரி அல்லது அதிகரித்தாலும் சரி அது குழந்தைக்கு பிரச்சனை தான்.
பொதுவாக குழந்தை எடை குறைவாக பிறந்தால் மிகவும் வருத்தப்படுவோம். அதுவே குழந்தை எடை அதிகமாக பிறந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.
சரி குழந்தை எடை குறைவாக (அ) அதிகமாக பிறப்பது ஏன் ? என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
பிறக்கும் குழந்தை, எடை குறைவாக அல்லது அதிமாக பிறப்பதற்கான காரணங்கள்:
1. தாயிக்கு உடல் நிலைகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் உடல் எடையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எனவே கர்ப்பிணி பெண்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் அனைத்து ஆலோசனைகளையும் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
2. கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு, இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் தகுந்த மருத்துவ சிகிச்சை பெறவேண்டியது மிகவும் நல்லது.
அதேபோல் கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தை எடை குறைவாக பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் குழந்தை எடை குறைவாக பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
சரியான மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் தங்களுடைய குழந்தைக்கும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் குழந்தை எடைகுறைவாக பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே தகுந்த சிகிச்சை பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.
3. மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் அனைத்து மாத்திரைகளையும் கட்டாயமாக கர்பிணிப்பெண்கள் கடைபிடிக்கவேண்டியது மிகவும் அவசியம்.
குறிப்பாக கடைசி மாதங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் B மாத்திரைகளை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாத்திரையை எதற்காக எடுத்துகொள்ள வேண்டும் என்றால் இந்த வைட்டமின் B மாத்திரையில் போலிக் அமிலம் அதிகளவு உள்ளதால், குழந்தைக்கு ஏற்பாடும் மூளைத்தண்டு கோளாறுகள் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்பதற்காக இந்த வைட்டமின் B மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
4. குறிப்பாக இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் B12, கொழுப்பு அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் சமமாக இருக்க வேண்டும்.
உண்ணும் உணவில் பாதி ஊட்டச்சத்துக்களும், மீதி நாம் அருந்தும் மருந்து மாத்திரைகள் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகிறது.
எனவே கர்ப்பிணிகள் தங்களது உடலில் ஊட்டசத்து அளவை சமமாக வைத்துக்கொள்வது குழந்தையின் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
5. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தது என்றால் அவற்றை ஊசிகள் மூலமும் சரி செய்துவிட முடியும்.
எனவே மருத்துவர்களிடம் கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்ற பிறகு பின்பற்றலாம்.
6. சத்தான உணவுகள், காய்கறிகள், சிவப்பு நிற பழங்கள், கீரைகள், புரதசத்து அதிகம் உள்ள பால், முட்டை, மீன் ஆகியவற்றை கர்ப்பிணிகள் உட்கொள்வதினால் பிறக்கும் குழந்தையின் உடல் எடை சமமாக இருக்க வழிவகுக்கும்.
7. ஜங் புட், எண்ணெய் தின்பண்டங்கள், உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் உட்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
8. தங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், தங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தையின் உடல் எடையும்(birth weight) அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
9. உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்வதினால், பிரசவ காலங்களில் குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் நிகழாமல். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வழிவகுக்கும்.
10. சாதாரணமாக பிறக்கும் குழந்தையின் எடையானது(birth weight) 2.5 கிலோ முதல் 2.8 கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தை சரியான உடல் எடையுடன் பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
4 கிலோவிற்கு மேல் இருக்கும் குழந்தைகள் எடை அதிகமாக பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இருப்பினும் நடைமுறைகளில் பொதுவாக குழந்தைகள் 2 முதல் 2.2 கிலோ எடையுடன் தான் பிறக்கின்றது என்று ஆய்வுகள் சொல்லப்படுகிறது.
இருப்பினும் குழந்தைகள் எடை அதிகமாக பிறக்க என்ன காரணம் என்றால், தாயின் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை அதிக உடல் எடையுடன் பிறக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.