பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ்..!

பிரசவ தழும்புகள் மறைய

பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ் (Avoiding stretch marks during pregnancy naturally)..!

பிரசவ தழும்புகள் மறைய – பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது எல்லா பெண்களுக்கும் அது ஏற்படும். கர்ப்ப காலத்தில் குழந்தை உள்ளே வளர்வதற்காக உடல் வேகமாக வளர்த்து விரிவடையும். அதே சமையம் குழந்தை பிறந்தவுடன் வயிற்றில் இருந்த இறுக்க தன்மை குறைந்து தோல் சுருக்கமாகவோ அல்லது வயிற்றில் தழும்புகள் ஏற்பட்டது போலவோ காணப்படும்.

இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை சில எளிய வழிகள் மூலம் சரி செய்யலாம். அதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

சுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Simple Normal Delivery Tips in Tamil..!

ஆயில் மசாஜ்:-

பிரசவத்திற்கு பின் வயிற்றில் தழும்பு மறைய (Avoiding stretch marks during pregnancy naturally) கொஞ்சம் ஆயிலை எடுத்து மெதுவாக வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தடவுங்கள். அதாவது உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெயை எடுத்து வயிற்றில் ஒரு பகுதியில் இரண்டு நிமிஷம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு இதே மாதிரி அடுத்த பகுதியிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் இதனால் செல்கள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். தழும்புகள் சீக்கிரமாக மறைய ஆரம்பிக்கும்.

அதுமட்டும் இல்லாமல்  மசாஜ் செய்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் வெந்நீரில் குளித்த பின்பு மசாஜ் செய்தால் இன்னும் சீக்கிரமாக சரியாகிவிடும்.

உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா ?

யோகா:-

பிரசவ தழும்புகள் மறைய யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. அதாவது வாக்கிங், யோகா போன்ற லேசான பயிற்சிகள் கூட இடுப்பு, தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும். தசைகள் வலுவானால் தளர்ந்து போன சருமம் சரியாகி விரைவில் குணமாகும்.

முட்டை:

பிரசவ தழும்புகள் மறைய – முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீஷியம் போன்ற நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.

இந்த ஊட்டச்சத்துக்கள் பிரசவ தளும்பிகளை போக்க மிகவும் உதவியா இருக்கின்றன.

முட்டை ஸ்க்ரப்பர்ஸ்:

செய்முறை:

ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து தனியாக அடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பின்பு இளஞ்சூடான தண்ணீரை கொண்டு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் உள்ள இடத்தில் நன்கு துடைத்து விட்டு.

அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள்.

பின் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வரை அப்படியே வைத்திருக்கவும். பின்பு இரஞ்சுடன் தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரன்டு அல்லது மூன்று முறை செய்து வர பிரசவ தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

கற்றாழை:-

பிரசவ தழும்புகள் மறைய கற்றாழை ஜெல்லை எடுத்து தேரடியாக தழும்புகள் இருக்கும் பகுதியில் தடவினால் தழும்புகள் மறைந்து விடும். கற்றாழை சருமத்தை மென்மைப்படுத்தும்.

இரட்டை குழந்தை எவ்வாறு உருவாகிறது..?

தேன்:-

பிரசவ தழும்புகள் மறைய சுத்தமான மலை தேனை எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். தேன் நன்கு காய்ந்தவுடன் இளஞ்சூடான தண்ணீரில் கழுவினால் சீக்கிரமாக பிரசவ தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்