குழந்தைக்கு ஏற்படும் சரும பருக்களின் தீர்வு..! Baby Acne Treatment home Remedies..!

Advertisement

குழந்தையின் சரும பாதுகாப்பு பற்றிய சூப்பர் டிப்ஸ்..! Baby Skin Care Tips..!

Baby Acne Treatment On face: வணக்கம் தோழிகளே..! இன்று பொதுநலம்.காம் பதிவில் குழந்தைக்கு சருமத்தில் வரும் பருக்களின் தீர்வுகளை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். குழந்தைகளுக்கு பொதுவாகவே முகத்தில், கை, கால், கன்னம் போன்ற பகுதிகளில் பருக்கள் வருவது இயல்பு. இதற்காக தாய்மார்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சரி வாங்க இப்போது குழந்தைக்கு முகத்தில் எதனால் பருக்கள் வருகிறது, இதற்கு என்னென்ன தீர்வு முறைகள் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..!

newகுழந்தை தொப்புள் வீக்கம் குணமாக..! Baby Hernia Belly Button Treatment..!

குழந்தைக்கு பருக்கள் சருமத்தில் எந்தெந்த இடங்களில் வரும்:

சிறிய குழந்தைகளுக்கு பருக்களானது உடலில் கன்னம், மூக்கு, முதுகு, தொடை, வயிறு போன்ற இடங்களில் வருவது இயல்பு.

பருக்கள் நீங்க எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:

குழந்தைக்கு சருமத்தில் இது போன்ற பருக்கள் அதிகமாக வர தொடங்கினால் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. இந்த பருவானது குழந்தைக்கு வலியினை பெரும்பாலும் ஏற்படுத்தாது.

இதனால் குழந்தைக்கு ஒருவேளை எரிச்சல், அரிப்பு போன்றவை நீண்ட காலத்திற்கு இருந்தால் கட்டாயமாக குழந்தைக்கான சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

குழந்தைக்கு பருக்கள் எதனால் வருகிறது:

குழந்தை தாயின் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றமானது குழந்தையின் உடலிலும் இது ஏற்பட்டு மாறாமல் தங்கி இருப்பதால் குழந்தைககளுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது.

அடுத்து பருக்கள் எதனால் வருகிறது என்றால் குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருப்பதால் கூட பருக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குழந்தைக்கு கால மாற்றத்தினால் கூட பருக்கள் போன்றவை வரும். குழந்தையின் முகத்தில் தாய்ப்பால் அல்லது எச்சில் இருந்தால் கூட பருக்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைக்கு தினமும் உடைகளை மாற்றி சுத்தம் செய்து விட வேண்டும். குழந்தைகளை பராமரிக்காமல் இருந்தால் இதுபோன்ற நோய்கள் வரக்கூடும்.

குழந்தை அவர்களின் கைகளால் கூட பருக்களை பரப்புவது மிகவும் அபாயம். இதை தாய்மார்கள் கவனித்து கொள்வது அவசியம். பருக்கள் அதிகமாக ஆகும் நிலையில் குழந்தைகளை சரும மருத்துவரிடம் அல்லது குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

பருக்களை தடுக்க தீர்வு முறைகள்:

குழந்தைகளுக்கு எப்போதும் கெமிக்கல் கலந்த சோப்களை பயன்படுத்தாமல் மிருதுவான சோப்களை பயன்படுத்தி வருவது நல்லது. குழந்தைக்கு வீட்டில் தயாரித்த சோப்களை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் பருக்கள் இருக்காது. ஏனென்றால் கெமிக்கல் சேர்க்காமல் இயற்கை முறையில் பயன்படுத்துவதால் சுலமபாக இதை தடுக்கலாம்.

குழந்தைகளை அனைவரும் தூக்கி கொஞ்சுவது இயல்பு. குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, குளிப்பாட்டும் போதெல்லாம் தாய்மார்கள் அனைவரும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் கூட குழந்தைக்கு சருமத்தில் பருக்கள் வரலாம்.

newகுழந்தைக்கு ஏற்படும் டயப்பர் ரேஷஸ் சரியாக டிப்ஸ்..! Diaper Rashes Home Remedies..!

ஆடை:

குழந்தைக்கு பருத்தியால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. குழந்தைக்கு போடும் ஆடைகளில் அதிக டிசைன் உள்ளது, ஃப்ரில், மணிகள் வைத்தது, ஜிமிக்கியால் ஆன ஆடை போன்றவற்றை தவிர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தையின் ஆடைகளை துவைக்கும் போது மைல்டான சோப்பு தூள், சோப்களை பயன்படுத்தி வர வேண்டும். சில குழந்தைகளுக்கு குளிப்பாட்டும் போது மூலிகையால் ஆன குளியல் பொடி, நலங்கு மாவு பயன்படுத்துவார்கள். இதனால் கூட இந்த பருக்களை தடுக்கலாம்.

குழந்தைக்கு தடவ கூடாத கிரீம் வகைகள்:

குழந்தைக்கு பருக்கள் வந்த இடத்தில் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த கிரீம் வகைகளை தடவி வருவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் அறிவுரை படி தடவிவருவது நல்லது.

கடைகளில் விற்கும் கிரீம்களை தடவுவதால் குழந்தைக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வெயில் நேரத்தில் வெளியில் அழைத்து செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். காலை வெயில்  குழந்தைக்கு நல்லது.

எண்ணெய் வகைகள்:

குழந்தைக்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களை குழந்தைக்கு தடவி வந்தால் குழந்தை சருமம் பருக்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

பேபி மசாஜ் எண்ணெயினை பயன்படுத்தி குழந்தைகளை குளிப்பாட்டி வந்தால் எந்த வித சரும பாதிப்புகளும் குழந்தைக்கு வராது.

சுத்தப்படுத்துதல்:

குழந்தை பால் குடித்த பின் வாய் சுற்றி அதன் கன்ன பகுதியில் வேர்த்து இருந்தாலோ அல்லது பால் பட்டு இருந்தாலோ பருத்தியால் ஆன துணியினால் துடைத்து விடவேண்டும். இது போன்று குழந்தைகளை பராமரித்து வருவதால் சரும பருக்களில் இருந்து குழந்தையை பாதுகாக்கலாம்.

newகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..! Baby Skin Care Tips In Summer..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement