குழந்தைக்கு சளி பிரச்சனை வராமல் பாதுகாக்க..! இதை TRY பண்ணுங்க

baby cold

குழந்தைக்கு சளி (baby cold) பிரச்சனை வராமல் பாதுகாக்க..!

தற்போது தட்பவெப்ப நிலை மாறி மழைக்காலம் வந்துள்ள நிலையில் பெரும்பாலான வீடுகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இருமலும் ஜலதோஷமும் என பெரும்பாலானோர் இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் எளிதில் இந்த காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். பொதுவாக குழந்தைகளை பொறுத்தவரை பசி இருந்தாலும் சரி அல்லது வலியாக இருந்தலும் சரி அவர்கள் அழுகை மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். அதே போல் குழந்தைக்கு சளி (baby cold) பிரச்சனை இருந்தால் அவற்றை சாதாரணமாக நினைக்கக்கூடாது. குழந்தையை கவனமாக கவனிக்க வேண்டும். குழந்தையை கவனிக்கும் போது நாம் செய்கின்ற சிறு சிறு தவறுகள் குழந்தைக்கும் சளி பிரச்சனை வருவதற்கு நமே காரணமாகிறோம்

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

baby cold 1

 1. குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும்.
 2. ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்கக்கூடாது.
 3. குளிர்காலத்தில் ஈரக்காற்று படாதவாறு குழந்தையின் உடலையும், காதுகளையும் கம்பளியால் சுற்றி மூட வேண்டும்.
 4. குழந்தைக்கு குளிர்காலத்தில் நன்கு கொதிக்க வைத்த ஆரிய தண்ணீரை கொடுக்க வேண்டும்.
 5. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க வேண்டும்.
 6. குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது.
 7. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  ஏன்னென்றால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சளி தொல்லை இருந்தால், பாலூட்டும் போது குழந்தைக்கும் சளி (baby cold) பிரச்சனை வந்துவிடும்.
 8. தலை குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்.
 9. அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கிவிடும்.
 10. எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும்.
ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்