வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

Updated On: September 21, 2023 12:46 PM
Follow Us:
குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்
---Advertisement---
Advertisement

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்: இரண்டு மாத குழந்தை மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று குழம்பும் தாய்மார்களே இனி கவலைப்படாதீர்கள்.

பிறந்த குழந்தை இரண்டு நாட்கள் வரை சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என அர்த்தம்.

இந்த இரண்டு மாத வயதுடைய குழந்தைக்கு மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனை வருவதற்கு மூல காரணம் உடல் உஷ்ணம் மற்றும் வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும் குழந்தைக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

கை குழந்தை:

உங்கள் குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி தண்ணீரின் சரியான அளவை கொண்டு சேர்க்கவேண்டும். தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவது அரிதுதான்.இருப்பினும், தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய காரணத்தினால் குழந்தை அடிக்கடி மலம் கழிக்கக்கூடும்.

இரண்டு மாத குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய வீட்டு வைத்தியம் என்ன என்று இவற்றில் நாம் காண்போம்.

குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்

1 குழந்தை மலம் கழிக்க பாட்டி வைத்தியம் – வெந்நீர்:

இரண்டு மாத குழந்தை உடல் வறட்சியின் காரணமாக கூட மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். எனவே தினமும் தேவையான அளவு ஆறிய வெந்நீரை கொடுக்க வேண்டும்.

குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம் – எண்ணெய்:

குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது குழந்தையின் உச்சி தலையில் ஒரு துளி எண்ணெய் வைத்திவிட வேண்டும். ஏனென்றால் குழந்தையின் உடல் உஷ்ணத்தினால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம்.

குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம் – உலர்திராட்சை:

குழந்தைக்கு உலர்திராட்சையை நீரில் ஊறவைத்து ஒரு சங்களவு குழந்தைக்கு தினமும் கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம் – இஞ்சி நீர்:

மேல் கூறிய மூன்று முறைகளை செய்தும் குழந்தைக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால். தாய் தினமும் இஞ்சி நீர் குடித்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம் – வசம்பு:

வசம்பு குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு (baby constipation) சிறந்த மருந்தாக விளங்குகிறது.

எனவே வசம்பை அடுப்பில் எரித்து அவற்றை உரசுமக்கல்லில் நன்றாக உரசி ஒரு சங்களவு தாய்ப்பாலில் இந்த வசம்பை கலந்து குழந்தைக்கு, வாரத்தில் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக குழந்தைக்கு குடல் சம்மந்தமான பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம். எனவே குழந்தையை கண்டிப்பாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips In Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now