குழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..!

குழந்தைக்கு முடி வளர

குழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..!

Baby hair growth tips in tamil

குழந்தைகள் முடி பொதுவாக மிகவும் மிருவாக மற்றும் அடர்த்தி குறைவாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமாக முடி இருக்கும். அதாவது சில குழந்தைகளுக்கு முடி சுருட்டையாகவும், சில குழந்தைகளுக்கு நீட்டமாகவும், சில குழந்தைகளுக்கு அடர்த்தியாகவும் இருக்கும். இருந்தாலும் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு தலையில் முடி இல்லை என்று மிகவும் வருத்தப்படுவார்கள். இருப்பினும் குழந்தைக்கு முடி வளர குழந்தையின் முடி மற்றும் ஸ்கால்ப் ஆகியவற்றை முறையாக பராமரித்தாலே போதும் குழந்தையின் தலைமுடி நல்ல ஆரோக்கியமாக வளரும்.

குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

 

சரி வாங்க குழந்தைக்கு முடி வளர சில பராமரிப்பு குறிப்புகளை பற்றி இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க…

குழந்தையின் முடி மற்றும் ஸ்கால்ப்பை பராமரிக்கும் முறைகள்

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – குழந்தைக்கு முடி வளர ஷாம்பு:

குழந்தைக்கு முடி வளர வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் வாரத்தில் இரண்டு முறை குழந்தைக்கு பேபி ஷாம்பு போட்டு  தலை அலசிவிடுங்கள்.

அதேபோல் குழந்தையை வெயிலில் வெளியே அழைத்து சென்றால் தலையை மறைக்க பேபி டவல், ஹேட் கேப் பயன்படுத்துங்கள்.

குழந்தையின் தலையில் பொடுகு ஏதாவது இருந்தால் ஆலிவ் எண்ணெய் தடவி, லேசாக மசாஜ் செய்துவிட்டு பின்னர் மைல்டான பேபி ஷாம்பை பயன்படுத்துங்கள்.

எப்போது குழந்தைக்கு ஷாம்பு பயன்படுத்தினாலும் அதை கையில் சிறிதளவு ஷாம்பு எடுத்து, சிறிது நீர் விட்டு கரைத்து பின்பு தான் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் பெரியவர்கள் பயன்படுத்தும் கெமிக்கல்ஸ் நிறைந்த ஷாம்புவை குழந்தைக்கு பயன்படுத்த கூடாது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – சீப்:

குழந்தைக்கு எப்போதும் அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள்.

ஈரம் நீங்கியவுடன் சீப்பால் மெதுவாக குழந்தைக்கு வாரி விட வேண்டும்.

நீங்கள் சீப்பால் வாருவது குழந்தைக்கு சுகமாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு மெதுவாக வார வேண்டும்.

சுருட்டை முடி அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கைகளால் மெதுவாக சிக்கலை எடுத்துவிட்டு பின் சீப் போட்டு வாரலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்  – ஹோமேட் கண்டிஷனர்:

இந்த ஹோம்மேட் கண்டிஷனர் எல்லாக் குழந்தைகளுக்கும் கிடையாது. அதிக முடி, சுருட்டை முடி, வறண்ட முடி உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஹோம்மேட் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

6+மாத குழந்தை உணவு பட்டியல் சிலவற்றை காண்போம் வாங்க..!

 

இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செய்யலாம்.

குழந்தைக்கு முடி வளர  2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து, அதைக் குழந்தையின் முடியில் தடவி, மிதமாக மசாஜ் செய்த பின் மைல்டான ஷாம்புவால் அலசி விடலாம்.

தேன் முடியில் தடவலாம். தேன் முடியை வெள்ளையாக்கும் என்பது தவறான கருத்து.

குழந்தைக்கு முடி வளர  (Baby hair growth tips in tamil) பழுத்த வாழைப்பழம் பாதி, அதை நன்றாக பேஸ்டாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் யோகர்ட், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் போட்டு கலக்கவும்.

இதைக் குழந்தையின் முடியில் பூசி 10 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு போட்டு அலசி விடலாம்.

குழந்தைக்கு முடி வளர (Baby hair growth tips in tamil) அவகேடோ பழத்தின் விழுது 2 ஸ்பூன், தேங்காய்ப் பால் – 3 ஸ்பூன், 2 ஸ்பூன் தேன் கலந்து குழந்தையின் முடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு போட்டு அலசி விடலாம்.

இவையெல்லாம் குழந்தைகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவிடாது, எனவே பயப்படாமல் பயன்படுத்துங்கள்.

இனிமேல் ஒரு முடி கூட உதிராது நரைக்காது

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – கற்றாழை ஜெல் 9 மாத குழந்தைகள் முதல் பயன்படுத்தலாம்:

குழந்தைக்கு முடி வளர (Baby hair growth tips in tamil)- கடையில் விற்கும் கற்றாழை ஜெல்லை வாங்குங்கள். குழந்தைக்கு தலைக்கு குளிக்கும் முன், எண்ணெய் தடவுவீர்களே அப்போது எண்ணெயுடன் சிறிது கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கலந்து, குழந்தையின் முடிகளில் பூசி 15 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்புவால் அலசி விடலாம்.

ஃப்ரெஷ்ஷான் ஆலுவேரா ஜெல் பயன்படுத்தலாம். இது குளிர்ச்சி என்பதால் மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் போட்டு விடுங்கள். பின்னர் கலந்து குழந்தையின் முடியில் பூசி 10 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் அலசி விடுங்கள்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – ஹேர் கட்:

குழந்தைக்கு முடி வளர (Baby hair growth tips in tamil)- சம்மர், வின்டர் போன்ற எந்த காலத்திலும் குழந்தைகள் முடியை அதிகமாக வைத்துக் கொள்ளாமல் அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3 மாதத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு டிரிம் செய்யலாம்.

குழந்தையின் முடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்:

குழந்தைக்கு முடி வளர உதவும் உணவுகளான வால்நட், பாதாம், கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு-பயறு வகைகள், முழு தானியங்கள் ஆகியவை அதிகளவு கொடுத்து வர வேண்டும்..

இனி குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்பட வேண்டாம். இப்படி செய்ங்க…
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com