குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?

baby health care tips tamil

Baby health care tips tamil..!

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தையின்  பசியின்மை – அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை எது என்றால், தன் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை என்பது தான். குறிப்பாக சில குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பதே முடியாத காரியம் என்றே சொல்ல வேண்டும். அதிலும் பல சமயம் என்ன செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவது இல்லை. இப்படி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பசியை தூண்டி விட என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க…

குழந்தைக்கு அதிகமா பசி எடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் மற்றும் குழந்தையின் பசியின்மைக்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..!

குழந்தை சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

குழந்தை வளரும் பருவத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால். அவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு உடல் எடை குறைவு. இதன் காரணமாக குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைய தொடங்கும். மேலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் நாளடைவில் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

குழந்தையின் பசியின்மை காரணம்:-

பொதுவாக குழந்தைகளுக்கு உடலில் ஏதவாது நோய், வயிற்று போக்கு அல்லது வயிற்றி எதாவது பிரச்சனை போன்ற காரணங்களினால் குழந்தைக்கு சரியாக பசி எடுக்காமல் இருக்கும்.

குழந்தையின் பசியின்மை காரணம்:-

சில சமயங்களில் குழந்தையின் குடும்பத்தை சேர்ந்த யாராவது நபர்களுடன் அல்லது உடன் விளையாடிய நண்பர்களுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அது அவர்களுடைய மனதை பாதித்து, அதன் காரணமாக பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், இதன் காரணமாக கூட குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள்.

குழந்தையின் பசியின்மை காரணம்:-

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சத்தான உணவு கிடைக்காமல் இருந்தாலும் நாளடைவில் இவ்வாறான பசியின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

குழந்தையின் பசியின்மை காரணம்:-

அதேபோல் தினமும் அதிகளவு குழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிட்டாலும் குழந்தை பசியின்மைக்கான முக்கிய காரணம் என்று கூறலாம்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

 

சரி வாங்க குழந்தையின் பசியின்மை (pasi eduka tips in tamil) பிரச்சனைக்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்..!

குழந்தை பசியின்மையை போக்கி குழந்தையை எப்படி சாப்பிடவைப்பது:

குழந்தைக்கு அதிகமா பசி எடுக்க வகை வகையான உணவு:-

குழந்தைகளுக்கு பசி எடுக்க என்ன செய்வது.? குழந்தைகளுக்கு எப்பொழுது ஒரே வகையான உணவுகளை செய்து தராமல், தினமும் வகை வகையான உணவுகளை செய்து கொடுக்கலாம். அதுவும் குழந்தை எம்மாதிரியான சுவையை விரும்புகிறார்களோ அம்மாதிரியான உணவுகளை செய்து கொடுங்கள். இதனால் குழந்தையின் பசி தூண்ட படும்.

பானங்கள்:-

எப்போதும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பானங்களை உணவோடு கொடுக்காமல், குழந்தை சாப்பிட்ட பின்னரே கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் குழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு அவசியம் காலை உணவை கட்டாயம் படுத்துங்கள்:-

பொதுவாக குழந்தைகள் காலையில் சரியாக சாப்பிட மாட்டார்கள். இதற்கு அவசரம், நேரமின்மை என்று பல கரங்கள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு காலை உணவை தவிர்க்காமல் முழுமையாக சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தை உணவு முறையில் சேர்க்க வேண்டியது:-

குழந்தையின் உணவில் பருப்பு, தயிர், நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரை வகைகள், முளைக் கட்டிய பயிர் வகைகள் என்று சமமாக அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு உணவை குழந்தைக்கு தர முயற்சி செய்யுங்கள்.

பசியின்மையை தூண்டும் வீட்டு வைத்தியம்:-

  • வேப்பங்கொழுந்து
  • மஞ்சள் துண்டு
  • ஓமம்

ஆகியவற்றை சேர்த்து, அரைத்து ஒரு மிளகு அளவுக்கு உருட்டி, அதைத் தேனில் நனைத்து குழந்தைக்கு கொடுக்க வயிற்று புழுக்கள் நீங்கிவிடும். மாந்தம் சரியாகிவிடும். இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைக்குக் கொடுக்கலாம்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்