குழந்தை தலையில் அடிபட்டால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்..! Baby hit head on floor

Advertisement

குழந்தை தலையில் அடிபட்டால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் / Baby hit head on floor ..!

குழந்தை தலையில் அடிபட்டால் / Baby hit head on floor:- குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியமான கடைமையாகும். அந்த வகையில் குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே அவரகள் சில செயல்களை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது எழுந்து உட்கார ஆரம்பித்துவிடுவார்கள் அந்த சமயங்களில் நகரவும் செய்வார்கள். அப்பொழுது அவர்கள் கொஞ்சம் தவறி கீழே விழுந்தார்கள் என்றால் முதலில் தலையில்தான் அடிபடும். எனவே குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளவேண்டியது பெற்றோர்களின் கடமை.

குழந்தைகள் எழுந்து நடக்க முயற்சி செய்யும்பொழுது அனைத்து குழந்தைகளும் விழுந்து விழுந்துதான் எழுந்து நடக்கப் பழகுவார்கள்.

இது ஒரு சாதாரணமான நிகழ்வு என்றாலும் குழந்தைகள் நடக்க முயற்சிக்கும் போது அதனால் ஏற்படும் காயங்கள், வீக்கம் உள்ளிட்ட விசயங்களை பெற்றோர்கள் அவசியம் கவனித்து, அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..!

 

சரி இந்த பதிவில் குழந்தைகள் நடக்க பழகும் பொழுது குழந்தையின் தலையில் அடிபட்டால் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெற்றோர்கள் நிதானமாக இருக்க வேண்டும்:

குழந்தைகள் நடக்கும் போது, திடீரென விழுந்து விடுவார்கள். அப்போது அவர்கள் நிதானமற்று இருந்தார்கள் என்றால், அந்த பதட்டத்தைத் தணிக்க சிறிய அளவில் மருத்துவ உதவி கண்டிப்பாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அப்படி விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும்.

நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என பார்த்து மோசமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இவை எல்லாவற்றையும் விட, பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் நிதானமாக இருக்க வேண்டும்.

குழந்தைக்கு தலையில் ஏற்படும் காயங்கள்:-

குழந்தை கீழே விழுவதால் அதன் தலையில் ஏற்படும் காயத்தை லேசான காயம் மற்றும் தீவிர காயம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

லேசான காயம் என்றால் லேசான வீக்கம், கீறல், சிராய்ப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படும் இது சாதாரணம் விஷயம்தான் இதற்கு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்ற அச்சமோ, பயமோ இருந்தால் தாராளமாக மருத்துவரின் ஆலோசனைகளை பெறலாம்.

தீவிரமான காயங்கள் இருந்தால் அதாவது ரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டிருந்தால் அப்போது எதுவும் யோசிக்காமல் குழந்தைகளை கட்டாயம் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்

குழந்தை தலையில் அடிபட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

குழந்தை தலையில் அடிபட்டால், குழந்தைகள் சந்திக்கும் பாதிப்புகள்

மண்டை ஓட்டில் பாதிப்பு, மூளையில் காயம், மூளை அதிர்ச்சி, மூளையில் ரத்தக் கசிவு இவற்றைப் பொதுவாக மூளையில் பாதிப்பு எனக் குறிப்பிடலாம்.

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள்..!

குழந்தை தலையில் அடிபட்டால் மருத்துவம்:

பொதுவாக குழந்தை தலையில் அடிபட்டால் உடனே அந்த காயத்தின் தன்மையை கவனிக்கவும். ஏனென்றால் அப்போதுதான் அதற்குத் தகுந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம். அதாவது லேசான காயங்களுக்கு வீட்டு வைத்தியமே போதுமானது.

குழந்தைக்கு லேசான வீக்கம் இருந்தால் அந்த இடத்தில், உடனடியாக ஐஸ் கட்டியை வைக்கலாம். தோலில் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு பேண்ட் எய்ட் போடலாம். இதுவே லேசான காயத்துக்குப் போதுமான வீட்டு வைத்தியமாகும்.

இருப்பினும் குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால் அதற்கு கட்டாயம் குழந்தையை குழந்தை நலன் மருத்துவரிடம் அழைத்து செல்வதுதான் மிக சிறந்த முடிவாகும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement