வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி

Updated On: January 3, 2024 3:12 PM
Follow Us:
Baby Milestones By Month Tamil
---Advertisement---
Advertisement

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தை வளர்ச்சி படிநிலைகள்

Baby Milestones By Month Tamil – புதிதாக குழந்தையை பெற்று வழக்கும் பெற்றோர்களுக்கு அன்பு வணக்கம். இது உங்களுக்கு முதல் குழந்தையாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கான பதிவு தான் இது. பொதுவாக குழந்தை பிறந்த தினம் முதல் அந்த குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை அந்த குழந்தையின் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

புதிதாக பிறந்த குழந்தை என்றால் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், அந்த குழந்தை அடுத்து என்ன செய்யும், போது குப்புற விழும், எப்போது தவழும், போது பேசும், எப்போது நடக்கும், எப்போது அம்மா சொல்லும், எப்போது அப்பா சொல்லும் என்ற அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆக குழந்தைகள் எந்த மாதம் என்ன செய்யும் என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

அரசு குழந்தை நல பரிசு பெட்டகத்தில் உள்ள பொருட்கள்=>

பிறந்த குழந்தை எந்த மாதத்தில் குப்புற விழும், தவழும், நகரும், நடக்கும்? Baby Milestones By Month Tamil

முதல் மாதம்:

குழந்தை பிறந்த முதல் மாதம் நன்றாக உறங்குவார்கள், இந்த மாதம் மட்டும் தான் தாய்மார்களுக்கு உறங்குவதற்கான மாதம். குழந்தை அழுவார்கள் அந்த நேரத்தில் மட்டும் நீங்கள் குழந்தைக்கு பால் கொடுத்தால் போதும்.

இந்த மாதத்தில் குழந்தைகளுக்கு 8 இன்ஜி முதல் 10 இன்ஜிக்குள் மட்டும் தான் பார்வை தெரியும், ஆக குழந்தைக்கு ஏதாவது இமேஜ் அல்லது கலர் காட்ட வேண்டும் என்றால் குழந்தையின் பக்கத்தில் கொடுங்கள்.

இரண்டாவது மாதம்:

இரண்டாவது மாதம் முதல் அவர்களுக்கு வாசனை, காது நன்றாக கேக்கும் திறன் இவை எல்லாம் வளர்ச்சியடையும். குறிப்பாக தாயின் குரலை நன்றாக அறிந்துகொள்வார்கள். மேலும் இந்த மாதம் கால்களை உந்தி உந்தி மேல் நோக்கி நகர ஆரம்பிப்பார்கள், அதேபோல் ஆ, ஊ என்று பேச ஆரம்பிப்பார்கள், இங்கா என்றெல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்கள். ஆக அவர்களிடம் நாம் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மெமரி பவரை அதிகரிக்க குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!

மூன்றாவது மாதம்:

மூன்றாவது மாதம் ஓரளவு அந்த குழந்தையின் தலை நிக்க ஆரம்பித்துவிடும். இந்த மூன்றாவது மாதம் அந்த குழந்தை தன் அம்மாவின் முகத்தை அறிந்து கொள்வார்கள், அம்மாவிடம் நன்கு ஆ, ஊ என்று பேசுவார்கள் மற்றும் சிரிப்பார்கள். மேலும் இந்த மூன்றாவது மாதம் மற்றவர்களின் முகத்தையும் நன்றாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.

நான்காவது மாதம்:

நான்காவது மாதம் அந்த குழந்தை யாராவது இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று என்று நினைக்கும், அந்த குழந்தையிடம் பேசிக்கொண்டே இருக்கவும், தாலாட்டு பாடி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும். இந்த நான்காவது மாதம் அந்த குழந்தை அதற்கு தெரிந்த பாஷையில் ஆ, ஊ என்று சத்தம் போடுவார்கள்.

இந்த மாதத்தில் நீங்கள் குழந்தையிடம் ஏதாவது டாயிஸினை கொடுத்தீர்கள் என்றால் அதனை இறுக்கமாக கையில் பிடித்துக்கொள்வார்கள்.

ஐந்தாவது மாதம்:

இந்த மாதத்தில் பொதுவாக அனைத்து குழந்தைகளுமே பிறகு குப்புற விழுவார்கள், நல்ல அடர்த்தியான நிறங்களை பார்க்க ஆரம்பிப்பார்கள். மேலும் அந்த குழந்தையிடம் ரொம்ப நெருக்கமாக இருக்கும் நபர்களின் குரல்களை கூட நன்கு அறிந்துகொள்வார்கள்.

ஆறாவது மாதம்:

ஆறாவது மாதம் பொதுவாக எல்லா குழந்தைகளுமே அனைவரிடமும் நன்கு சிரித்து, விளையாடுவார்கள், இப்பொழுது குப்புற விழுந்து முன்னடி நகர்ந்து செல்ல முயற்சி செய்வார்கள், அது போக மல்லாக்கா படுத்துக்கொண்டே கால்களினால் உந்தி உந்தி இருக்கும் இடத்தை சுற்றி செல்வார்கள்.

அது போக இந்த மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிப்பார்கள். இந்த மாதம் குப்புற விழுவதுடன், அங்கும் இங்கும் பிறழ ஆரம்பிப்பார்கள்.

ஏழாவது மாதம்:

ஏழாவது மாதம் குழந்தையின் பார்வை திறனை முழுமையாக பெற்றிருப்பார்கள். இந்த ஏழாவது மாதம் அவர்களுடைய கால்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த ஏழாவது மாதம் மற்றவர்களின் உதவி இல்லாமல் குழந்தையால் தானாக அமர்ந்துகொள்ள முடியும்.

எட்டாவது மாதம்:

பேசுவதற்கு ஆரம்பிப்பார்கள், இந்த மாதத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்துவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 மாத குழந்தை உணவு அட்டவணை

ஒன்பதாவது மாதம்:

இந்த ஒன்பதாவது மாதத்தில் ஒரு சில வார்த்தைகளை அவர்களினால் உச்சரிக்க முடியும், நன்கு தவழ ஆரம்பிப்பார்கள். சாப்பிட்டியா என்று கேட்டல் ஆமா இல்லை என்று அவர்களினால் சொல்ல தெரியும்.

பத்தாவது மாதம்:

உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்துவிட்டது என்றால் இந்த பத்தாவது மாதம் நார்களை, சோபா போன்றவரை பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க ஆரம்பிக்கும், பிறகு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.

பதினோராவது மாதம்:

இந்த பதினோராவது மாதத்தில் குழந்தைகள் தானாக சாப்பிட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். தானாக சாப்பிட வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.

பனிரெண்டாவது மாதம்:

பனிரெண்டாவது மாதத்தில் குழந்தைகள் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் அதை எல்லாம் அவர்களும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now