குழந்தைகளின் மலச்சிக்கலை உடனடியாக சரிசெய்ய இதை மட்டும் செய்யுங்கள்..!

Baby Motion Problem Home Remedies in Tamil 

இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கல் பிரச்சனையை போக்க சிறந்த பாட்டி வைத்தியம் ஒன்றை தான் பார்க்க போகின்றோம். பெரியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதுவே சிறிய குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு அதனால் ஏற்பாடும் பின்விளைவுகளை பற்றி ஒன்றும் தெரியாது.

அதனால் நாம் தான் அவர்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வைக்கவேண்டும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி அவர்களை ஆரோக்கியத்துடன் வளர உதவுங்கள்.

Baby Motion Problem Solution in Tamil:

Baby Motion Problem Home Remedies in Tamil

என் குழந்தைகள் நன்றாகத்தான் சாப்பிடுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. அதற்கு என்ன தீர்வு என்று கவலைபடுகிறீர்களா இனிமேல் அந்த கவலை வேண்டாம்.

இதையும் படியுங்கள்=> உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும்..!

டிப்ஸ் – 1

குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க உதவும் டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. காய்ந்த திராட்சை – 20
  2. தண்ணீர் – 1 டம்ளர்  

அடுப்பில் ஒரு பாத்திரத்திதை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நாம் எடுத்துவைத்துள்ள 20 காய்ந்த திராட்சை போட்டு 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளர் அளவிற்கு வரை நன்கு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுப்பதன் மூலம் அவர்களின் மலச்சிக்கல்  1/2 மணி நேரத்தில் நீங்கிவிடும்.

டிப்ஸ் – 2

குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க உதவும் டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சோம்பு – 1/4 டீஸ்பூன் 
  2. தண்ணீர் – 1 டம்ளர்

அடுப்பில் ஒரு பாத்திரத்திதை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நாம் எடுத்துவைத்துள்ள 1/4 டீஸ்பூன் சோம்பு போட்டு 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளர் அளவிற்கு வரை நன்கு கொதிக்க வைத்துக் வடிக்கட்டிக் கொள்ளுங்கள்.

இதனை இரவு குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களின் மலச்சிக்கல் நீங்கிவிடும்.

மேலே கூறியுள்ள இரண்டு பாட்டி வைத்தியங்களும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் பயன்படும்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்