கோடை கால குழந்தையின் சரும பராமரிப்பு..! Baby Skin Care During Summer..!
Baby Skin Care In Tamil: இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கோடை காலத்தில் குழந்தைகளின் உடல், மற்றும் சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம். வெயில் காலங்களில் குழந்தைக்கு பல விதமான நோய் பிரச்சனைகள் வரும். உடலில் தடிப்பு, வியர்க்குரு, போன்ற பிரச்சனைகள் நடப்பது இயல்பு தான். கோடை காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வருவதை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்! |
கோடை கால குழந்தை பராமரிப்புகள்:
குழந்தைக்கு பருத்தி ஆடை அணிதல்:
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு பருத்தியால் ஆன ஆடைகளையே கட்டாயம் போட்டு விட வேண்டும். வெயில் நேரத்தில் குழந்தைக்கு தினமும் 3 முறை உடைகளை மாற்றிவிட வேண்டும்.
உடைகளால் கூட குழந்தையின் உடல் வெப்பம் அதிகமாகி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
குழந்தையை குளிக்க வைக்கும் முறை:
வெப்ப காலங்களில் குழந்தைகளை கண்டிப்பாக காலையில் மற்றும் மாலை வேளையில் இருநேரமும் குளிக்க வைக்க வேண்டும்.
குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தையை குளிப்பாட்டும் போது தலை குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.
11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..! |
தொப்புளில் குழந்தைக்கு விளக்கெண்ணெய் வைத்தல்:
குழந்தைக்கு வெயில் நேரத்தில் வயிற்று வலி பிரச்சனை வராமல் இருக்க குழந்தையின் தொப்புளில் விளக்கெண்ணெயை தடவி வரவேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் குழந்தையின் தலையில் தினமும் எண்ணெய் தேய்த்து விடவேண்டும்.
குழந்தைக்கு கட்டாயமாக தண்ணீர் கொடுக்க வேண்டும்:
குழந்தைக்கு அதிகமாக இந்த நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும். 6 மாத குழந்தை உள்ள தாய்மார்கள் தினமும் 3 லிட்டர் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். கோடை நேரத்தில் வெள்ளரிப்பழம், தர்பூசணி, இளநீர் எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தையின் படுக்கை இடம் மாற்றுதல்:
தொட்டிலில் தூங்கும் குழந்தைக்கு தினமும் அந்த தொட்டில் ஆடைகளை தினமும் மாற்ற வேண்டும். தொட்டில் ஆடை மூலமாகவும் குழந்தைக்கு உடல் சூடு அதிகரிக்க கூடும்.
அதுமட்டும் இல்லாமல் கீழே படுக்கும் விரிப்பையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இது போன்று செய்வதால் குழந்தைகளுக்கு கோடை நேரத்தில் சரும பாதிப்புகள் இருக்காது.
1 வயது குழந்தைக்கான புரத உணவு..! 1 Year Baby Protein Foods..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |