குழந்தை சரும பராமரிப்பு – குழந்தைக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (Baby Skin Care Tips In Tamil)..!
குழந்தை சரும பராமரிப்பு – குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. சென்ஸிடிவ் என்று கூட சொல்லலாம். சூடு, பாக்டீரியாவின் தாக்கம், எச்சில் மூலமாககூட குழந்தையின் சருமம் பாதிக்கலாம்.
சரும பிரச்னைகளை நாம் அசாதாரணமாக கையாள கூடாது. எனவே குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.
குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனைக்கு 8 கைவைத்தியம்..! |
குழந்தையின் சருமத்திற்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் (Baby Skin Care Tips In Tamil):
குழந்தை சரும பராமரிப்பு – உலர் சருமம்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வானிலை மாற்றம், அதிக வெயில், அதிக குளிர், உப்பு தண்ணீர், சுற்றுப்புற காற்று, உடலில் ஈரத்தன்மை குறைவது போன்றவற்றால் உலர் சருமமாக மாறும். அதிகமான சூடு உள்ள தண்ணீரில் குழந்தைகளை குளிக்க வைப்பதும் ஒரு காரணம்.
எனவே குழந்தைக்கு தரமான, சரியான மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது நல்லது. பேபி கிரீம், பேபி லோஷன் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது.
குழந்தை சரும பராமரிப்பு – ஹீட் ராஷ்:
ஹீட் ராஷ், என்பது வியர்குரு என்று சொல்லலாம். பிறந்த குழந்தைகளின் வியர்வை சுரப்பிகள் முழுமையான வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, எளிதில் சுரப்பிகளில் பிளாக் ஏற்படலாம்.
அதாவது வானிலை மாற்றம், வெயில் காலம், குழந்தைக்கு கனமான துணி அணிவது, குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாத துணி வகையை அணிவதால் ஏற்படும் அலர்ஜி, அதிக காய்ச்சல், ஹெவியான கிரீம், ஆயின்மென்ட் போன்றவை சரும சுரப்பிகளில் தடை ஏற்பட செய்கின்றன. இதனாலும் ஹீட் ராஷ் வரலாம்.
லேசான, பருத்தி உடை அணிவிப்பது நல்லது. திக் மாய்ஸ்சரைஸர் தவிர்க்கலாம். தரமான, குழந்தையின் சருமத்துக்கு உகந்த பேபி கிரீம், பேபி மில்க் + ரைஸ் கிரீம், பேபி லோஷன் பயன்படுத்தலாம். ஃபேன், வெளி காற்று உள்ளே வருவது போன்ற அறையில் குழந்தையை வைக்கலாம்.
குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது??? |
குழந்தை சரும பராமரிப்பு – நாப்பி ராஷ்:
டயாப்பர் பாதிப்புகளால் வருவது இந்த நாப்பி ராஷ். முதல் ஒரு ஆண்டுக்குள் 35% சதவிகித குழந்தைகளுக்கு டயாப்பர் பாதிப்புகள் வரும். 9-12 மாத குழந்தைகளுக்கு, சற்று அதிகமாகவே இந்தப் பிரச்னை வரும்.
நீண்ட நேரமாக டயாப்பர் மாற்றாமல் இருப்பது, மலம், சிறுநீர் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பு, தொடர்ந்து டயாப்பர் பயன்படுத்துவதால் ஈரப்பதம் குறைந்து விடுதல் அல்லது ஈரப்பதம் அதிகமாக இருப்பது, டயாப்பர் கெமிக்கல் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் போவது, பாக்டீரியா, பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படுவது ஆகியவை முக்கிய காரணம்.
பேபி டயாப்பர் அடிக்கடி மாற்றுங்கள். தரமான பேபி கிரீம் தடவலாம்.
குழந்தையை சுத்தம் செய்ய ப்ளெயின் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். அதன் பிறகு தரமான, மைல்டான பேபி கிரீம் பூசலாம்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |