குழந்தை சரும பராமரிப்பு பகுதி – 2

Advertisement

குழந்தைக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்..! (Baby Skin Care Tips In Tamil) பகுதி – 2

பகுதி இரண்டு: சரும பிரச்சனைகளை நாம் அசாதாரணமாக கையாள கூடாது. எனவே குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் (baby skin care in tamil) அதற்கான தீர்வுகளும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

குழந்தைக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்..! பகுதி – 1

குழந்தை சரும பராமரிப்பு (Baby Skin Care Tips In Tamil)..!

குழந்தை சரும பராமரிப்பு – கிராடிள் கேப்

baby skin care in tamil: இந்த சரும பிரச்சனை குழந்தை பிறந்து சில வாரங்கள் வரை இந்த கிராடிள் கேப் பெரும்பாலான குழந்தைகளுக்கு வரும். இது பொதுவான பிரச்சனைதான். 4-6 மாதங்கள் வரை நீடிக்கும். பின் இந்தப் பிரச்சனை மறைந்துவிடும்.

சருமத்தில் பூஞ்சை/ஈஸ்டின் வளர்ச்சியே கிராடிள் கேப்பாக தெரியும். தாயின் வயிற்றில் இருந்தபோது, தாயின் மெட்டர்னல் ஹார்மோனும் ஒரு வகை காரணம்தான். வளர வளர இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். சில குழந்தைகளுக்கு, இது அடாபிக் எக்ஸிமா என்ற சரும பிரச்சனை வருவதற்கான முன் அறிகுறியாகவும் இருக்கலாம். முடியின் வேர்க்கால்கள், எண்ணெய் சுரப்பிகளில் இயல்பற்ற சுரப்பு நீடிப்பதால் வரக்கூடிய பிரச்சனை.

தீர்வு:

குழந்தை சரும பராமரிப்பு – ஈஸ்ட், பாக்டீரியல் தொற்று ஆகியவை காரணமாக இருக்கும். கண்ணீர் வராத, மைல்டான ஷாம்பு  பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை கிராடிள் கேப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள். பேபி ஷாம்பு பயன்படுத்தினால் கிராடிள் கேப் பிரச்சனை சரியாகிவிடும்.

குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்..!

குழந்தை சரும பராமரிப்பு – அடாபிக் எக்ஸிமா:

பெரியவர்கள், மழலைகள், குழந்தைகள் என அனைவருக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். முதல் ஒர் ஆண்டுக்குள், சில குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரலாம். பல குழந்தைகள் தாங்கள் வளரும் போது, இந்த எக்ஸிமா சரும பிரச்சனையிலிருந்து வெளிவந்து விடுகின்றனர். இந்தப் பிரச்சனை வருவதற்கான சரியான காரணம் இதுதான் என்று உறுதியாக சொல்ல முடியாது.

மரபியல் ரீதியான நோய் எதிர்ப்பு திறன் குறைந்து இருந்தாலும் வரலாம். சோப், கிரீம், டிடர்ஜென்ட் அலர்ஜியும் இருக்கலாம்.

தீர்வு:

குழந்தை சரும பராமரிப்பு (Baby Skin Care Tips In Tamil)-   சுகாதாரமற்ற சூழல், தடுப்பூசி ஆகியவையும் காரணமாகலாம். சாதாரண தண்ணீர் அல்லது இளஞ்சூடான தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்டுங்கள்.

குளித்த பிறகு குழந்தையின் சருமத்தில் உள்ள ஈரத்தை, ஒத்தி ஒத்தி துடைத்து எடுங்கள். எக்ஸிமா போக மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.

குழந்தை சரும பராமரிப்பு – பேபி ஆக்னி (பரு):

பொதுவாக குழந்தையின் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைதான் இது. குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை இந்த பிரச்சனை இருக்கும். பின்பு இந்த பிரச்சனை சரியாகிவிடும். எனவே குழந்தையின் நகங்களை கட் செய்ய வேண்டும். குழந்தையின் சருமத்தில் ஏற்பட்டுள்ள பருவை கிள்ளுவது, அவற்றை அழுத்தி சீழ் எடுப்பது போன்றவற்றை செய்ய கூடாது.

தீர்வு:

குழந்தை சரும பராமரிப்பு (Baby Skin Care Tips In Tamil) – பருக்களைப் போக்க மருத்துவர் பரிந்துரைக்கும் கிரீம் பூசலாம்.   ஸ்கின் கேர் தயாரிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்றது. இதற்கு தேங்காய் எண்ணெயும் சிறந்த மருந்து.

குழந்தை சரும பராமரிப்பு – முக்கிய குறிப்பு:

குழந்தைகளுக்கு வாசனை நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளவும். குறிப்பாக குழந்தைகளுக்கு புதிதாக ஆடை அணிவிக்கும் முன் அவற்றை நன்றாக துவைத்த பின்பே அணிவிக்க வேண்டும்.

குழந்தைகள் இருக்கும் வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. லேசான உடைகள், வானிலைக்கு ஏற்ப உடைகள் அணிவிப்பது நல்லது.

எப்போதும் மைல்டான சோப், ஷாம்பு, டிடர்ஜென்ட் பயன்படுத்துவதே நல்லது. அதிக கெமிக்கல்கள், வாசனை கொண்ட சோப் தவிர்க்கலாம். குளிக்கும் நேரம் 5-10 நிமிடங்கள் வரை இருப்பதே நல்லது.

பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

Advertisement