குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும்..!

Advertisement

குழந்தை தடுப்பூசி (Baby Vaccines) போட்ட பிறகு பெற்றோர்கள் எப்படி பராமரிக்க வேண்டும் (Baby Care In Tamil)..!

குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு, குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும். என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க… குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது…? குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

குழந்தை தடுப்பூசி போட அழைத்து செல்லும் போதும் இவ்வாறு தயார் செய்து அழைத்து செல்லுங்கள்…

Baby Care In Tamil – குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!

 

குழந்தைகளுக்கு எளிதில் கழற்றக்கூடிய மிகவும் லேசான ஆடைகளை போட்டுவிடுவது மிகவும் நல்லது.

குழந்தைகளுக்கு ஊசி போடும் போது நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் குழந்தையின் கவனத்தை திசைதிருப்புங்கள்.

குழந்தை பாதுகாப்பாக உணரும் படி அரவணைத்துக் கொள்ளுங்கள். கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும் போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

குழந்தை தடுப்பூசி (Baby Vaccines) போட்ட பின்பு பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:-

மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்கு ஊசி போட்ட இடத்தில் ஈரமான துணியை வைத்து லேசாக ஒற்றி எடுக்க வேண்டும்.

குழந்தைக்கு ஊசி போட்ட பின்பு காய்ச்சல் வந்தால் தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் தடுப்பூசி போட்ட பின்பு ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள், இதற்கு கவலைபட வேண்டாம். இருப்பினும் உங்கள் குழந்தைகள் மீது அதிக கவனமாக இருங்கள்.

குழந்தை தடுப்பூசி (Baby Vaccines) போட்டபின் ஏற்படும் பொதுவான பின் விளைவுகள்:-

பொதுவாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம்.

M.M.R அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.

குழந்தை தடுப்பூசி போட்ட பின்பு வரும் காய்ச்சலை சந்திக்க வேண்டும்:

குழந்தை அமைதியாக உறங்குகிறதா என்பதைக் கவனியுங்கள். இதற்கு குழந்தையின் அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மாமீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.

Baby Care In Tamil – குழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்..!

காய்ச்சலின் நிலையும் அதை குணப்படுத்தும் முறையும்..!

குறைவான காய்ச்சல் (37.4 – 38C):- 

இந்த நிலையில் குழந்தைக்கு லேசான ஆடைகளை அணிந்துவிடுங்கள், மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்கவையுங்கள், அதேபோல் நீர்சத்து உள்ள உணவுகளை அதிகம் கொடுங்கள்.

காய்ச்சல் (Over 38 – 38.9C), அதிக காய்ச்சல் (39C or higher):-

மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று காய்ச்சலுக்கான மருந்தினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தையை மிகவும் பாதுகாப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள்.

மிகவும் அரிதாக வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் குழந்தைகள் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள்.

அலட்சியம் படுத்தக்கூடாத விஷயங்கள்:-

உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல், அதிகமான காய்ச்சல், பலவீனமாகுதல், தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது, சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை, 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது,  சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல், உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல், வயிறு வீக்கம், மலத்தில் ரத்தம் வருதல், அடிக்கடி வாந்தி எடுத்தல், 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் வருவது மிகவும் சாதாரணமான விஷயம் தான். ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

Baby Care In Tamil – குழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

உணவுகள்:

தாய்ப்பால், சிறுதானிய கஞ்சி வகைகள், அரிசி கஞ்சி, பழக்கூழ் கொடுத்தல், இளஞ்சூடான தண்ணீரில் தயாரித்த ஜூஸ், சூப் வகைகள், ஸ்டீம் தோசை, இட்லி, இடியாப்பம், ரசம் சாதம் தண்ணீர், ஆப்பம் போன்ற லேசான உணவுகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement