குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் டிப்ஸ்..!
சில தாய்மார்களின் பெரும் கவலை என்னவென்றால் தன் குழந்தை என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கவே மாட்டேங்குது, எப்போதுமே ஒல்லியாவே என் குழந்தை இருக்கின்றது, என்ன செய்வது என்று புலம்பி தள்ளும் தாய்மார்களுக்கான சில எளிய டிப்ஸ் தான் இவற்றில் நாம் காணப்போகிறோம். அதுவும் குழந்தைக்கு என்னென்ன உணவுகள் (baby weight gain foods) கொடுத்தால் உடல் அதிகரிக்கும் என்பதையம் இவற்றில் நாம் காண்போம்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..! |
பிறந்த குழந்தை:
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். தாய் பால் மூலமாகவே உடல் எடையை அதிகரிக்க இயலும்.
பொதுவாக பிறந்த ஆறு மாதத்திற்கு பிறகே குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
பிறந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசனையை பெறலாம்.
குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் – பால் சார்ந்த உணவுகள்:
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு பால் சார்ந்த உணவுகளை அதிகளவு கொடுக்கலாம். அதாவது பால், தயிர், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை அதிகளவு கொடுக்கலாம்.
குழந்தைக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்..! பகுதி – 1 |
பால் அருந்த அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாதத்தில் சிறுதளவு மோர் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம். குழந்தைக்கு பால் சார்ந்த உணவுகள் அதிகளவு கொடுப்பதினால் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் – வாழைப்பழம்:
ஆறு மாத குழந்தைகளுக்கு தினமும் மூன்று வாழைப்பழம் கொடுக்கலாம். அதாவது காலை, மதியம் மற்றும் மாலை என்று மூன்று வேலைகளும் குழந்தைக்கு பசிக்கும் போது ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொடுக்கலாம். அல்லது வாழைப்பழத்தை நன்றாக மசித்து அவற்றில் சிறிதளவு பால் சேர்த்து கொடுக்கலாம்.
வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் குழந்தையின் (baby weight gain foods) உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் – சக்கரவல்லி கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு:
சக்கரவல்லி கிழங்கு மற்றும் உருளைகிழங்கு இவற்றில் இருக்கும் கார்போஹட்ரைட் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
எனவே தினமும் குழந்தைகளுக்கு சக்கரவல்லி கிழங்கு மற்றும் உருளை கிழங்கு அவித்து கொடுக்கலாம்.
குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் – அவகோடா பழம்:
வெண்ணை பழம் எனப்படும் அவகோடா பழமானது அனைத்து பலன்களை விட கலோரிகள் அதிகம் இருக்கின்றது. அதுவும் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து கலோரிகளும் இந்த அவகோடா பழத்தில் கிடைக்கின்றது.
இந்த வெண்ணை பழத்தில் விட்டமின், மினரல்ஸ் என்று பல சத்துக்கள் இருப்பதினால் இந்த பழத்தை ஆறுமாத குழந்தைகளுக்கு கொடுப்பதினால் (baby weight gain foods) குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்..! |
குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் – முட்டை:
முட்டையை ஒரு வருட அல்லது ஒன்றரை வருட குழந்தைகளுக்கு கொடுத்து பழக்க வேண்டும். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கொஞ்சம், கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
அதுவும் உங்கள் குழந்தைகளுக்கு அரிப்பு, தேமல் போன்ற ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறதா என்று பார்த்து கொண்டு, உங்கள் குழந்தைக்கு தினமும் ஒரு முட்டை கொடுத்து வந்தால், முட்டையில் இருக்கும் புரத சத்துக்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |