உங்க குழந்தை சரியா சாப்பிடலையா? அதனால் ஒல்லியாக இருக்காங்களா! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

உங்க குழந்தை சரியா சாப்பிடலையா? அதனால் ஒல்லியாக இருக்காங்களா! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Baby weight gain tips in tamil:- குழந்தைகள் வளரும் பருவத்தில் சரியாக சாப்பிடமாட்டார்கள்.. இதனால் உடல் மெலிந்து மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காணப்படுவார்கள். குழந்தைகள் வளரும் பருவத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அதாவது குழந்தையின் ஒவ்வொரு வருடமும் அவர்களின் வயதிற்கேற்ற உடல் எடையை பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும். இருந்தும் குழந்தைகள் சாப்பிடுவதற்கே மிகவும் அடம்பிடிப்பார்கள். இருப்பினும் குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே பெற்றோர்களின் கடமையாகும். எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகள் பொதுவாக சாப்பிடுவதற்கு மிகவும் அடம்பிடிப்பார்கள் இருந்தாலும் அவர்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான பானங்களை (health drinks for kids) செய்து கொடுத்தால், அதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் மூலம் குழந்தையின் உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

 

சரி குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க பானம்  எப்படி தயாரிப்பது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பாதாம் பருப்பு – 3
  2. முந்திரி பருப்பு – 4
  3. உலர்திராட்சை – 10
  4. காய்ச்சிய பசும் பால் – 1/2 கிளாஸ்
  5. கல்கண்டு – ஒரு ஸ்பூன்
  6. ஜாதிக்காய் பவுடர் – ஒரு சிட்டிகை
குழந்தை உயரமாக வளர உணவு வகைகள்

 

Health drinks for kids – செய்முறை:

Step: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாதாம், முந்திரி மற்றும் உலர்திராட்சை ஆகியவற்றை அந்த நீரில் சேர்த்து இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும்.

Step: 2

பின் மறுநாள் காலையில் அந்த ஊறவைத்த பருப்புகளை எடுத்து மிக்ச்சியில் சேர்த்து, மூன்று ஸ்பூன் காய்ச்சிய பசுப்பால் சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளுங்கள்.

Step:3

பின் இந்த கலவையை காய்ச்சிய 1/2 கிளாஸ் பசும் பாலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

Step: 4

பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் கல்கண்டு மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்துவிடவும்.

இந்த பானத்தை குழந்தைகளுக்கு காலை வேளை அல்லது இரவு தூங்குவதற்கு முன் கொடுக்கலாம்.

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..!

Baby weight gain tips in tamil – பயன்கள்:

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள ஜாதிக்காய் பவுடர் குழந்தையின் பசியை தூண்டும்.

மேலும் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள நட்ஸ் பொருட்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும், குழந்தைகள் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

இந்த பானத்தை இரண்டு வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு தாராளமாக செய்து கொடுக்கலாம்.

இந்த பானம் குழந்தைகள் அருந்துவதினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement