குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..!

baby food

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..!

குழந்தைக்கு உடல் எடையானது ஒவ்வொரு ஆண்டுகளும் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது மிகவும் அவசியம். எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க சத்தான உணவுகளைத் (baby food) தரவேண்டும். குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. சரி எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

குழந்தையின் உடல் எடையை இயற்கையான முறையில், மிகவும் ஆரோக்கியமாகவும் அதிகரிக்க நட்ஸ் பௌடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர் எப்படி தயாரிப்பது என்று இப்போது நாம் காண்போம்.

நட்ஸ் பௌடர் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

  1. பாதாம் – ஒரு கப்
  2. பிஸ்தா – ஒரு கப்
  3. முந்திரி – ஒரு கப்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து ஒரு கப் பாதாம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை பொன்னிறமாக வருத்தபிறகு, நன்றாக ஆறவைக்கவும். பாதாம் நன்றாக ஆறியதும், மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் பிஸ்தாவை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும், பின்பு ஆறவைத்து மிக்சியில் சேர்த்து நன்றாக பௌடர் போல அரைத்து வைத்து கொள்ளவும்.

பின்பு முந்திரி பருப்பை வாணலியில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும், பின்பு நன்றாக ஆறவைத்து மிக்சியில் சேர்த்து நன்றாக பௌடர் போல் அரைத்து கொள்ளவும்.

இந்த மூன்று நட்ஸ் பௌடரையும் தனித்தனியாக ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும்.

குழந்தைக்கு நட்ஸ் பௌடர் கொடுக்கும் முறை:

அரை ஸ்பூன் பாதாம் பௌடர், அரை ஸ்பூன் பிஸ்தா பௌடர், அரை ஸ்பூன் முந்திரி பௌடர் என்ற அளவிற்கு ஒரு பௌலில் எடுத்துக்கொள்ளவும்.

பின்பு கால் கப் நன்றாக காய்ச்சிய பசும் பாலை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் இந்த நட்ஸ் பௌடரை 1/2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு இந்த பாலில் சப்பாத்தி அல்லது இட்லியை ஊறவைத்து குழந்தைகளுக்கு ஊட்டிவிடவும்.

இந்த நட்ஸ் பௌடரை குழந்தைகளுக்கு 10 மாதங்களில் இருந்து, கொடுக்க ஆரம்பிக்கலாம்.

இந்த நட்ஸ் பௌடர் (baby food) குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளித்து, இயற்கையாகவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்