குழந்தைக்கு கொலுசு மற்றும் காப்பு அணிவதற்கான காரணம்
குழந்தை பிறந்து பேர் வைத்த பிறகு பல வகையான ஆபரணங்கள் போட்டு அலங்கரிப்பார்கள். குழந்தைக்கு கை மற்றும் கால்களில் மை பொட்டுவைப்பார்கள், இன்னும் சில நபர்கள் கருப்பு கயிறு கட்டுவார்கள். இது எதற்காக வைக்கிறார்கள் என்றால் திருஷ்டியை கழிப்பதற்காக வைக்கப்படுகிறது. இது போல தான் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி காப்பு அணிவார்கள். இதற்கான காரணத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..
குழந்தைகளுக்கு இந்த டூத் பேஸ்ட் மட்டும் கொடுத்து பல் துலக்க சொல்லாதீங்க..
குழந்தைக்கு வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்:
குழந்தைகளுக்கு கை மற்றும் கால்கள், இடுப்பில் அரைஞாண் கயிறு போன்றவற்றை அணிவார்கள். இவை அணிவதால் பல நன்மைகளை ஏற்படுத்துகிறது. அது என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு வெள்ளி அணிவதால் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வெள்ளி ஒரு கிருமி நாசினியாக இருக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் அடிக்கடி சளி மற்றும் உடல் நிலை குறைபாடு ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. வைரஸ் மற்றும் பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.வெள்ளி ஆபரணங்களை கை மற்றும் கால்களில் போடுவதால் கை மற்றும் கால்கள் பலமாக இருக்கும். குழந்தை மன அளவில் தைரியமாக இருப்பதற்கு உதவுகிறது. நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
உடல் ஆரோக்கியமாகவும், மன ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதற்கு வெள்ளி உதவியாக இருக்கிறது. இதனால் தான் பிறந்த குழந்தைக்கு வெள்ளி ஆபரணங்கள் அணிகிறார்கள்.
குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |