Best Baby Shampoo in India
ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த குழந்தைக்கு தேவையானதை பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஏன் தாய்மார்களுக்கு நம் வீட்டில் முன்னோர்கள் அறிவுரைகள் கூறியிருப்பார்கள். இந்த உணவு சாப்பிடு, சாப்பிடாத என்றெல்லாம் கூறுவார்கள். அது போல குழந்தை பிறந்து விட்டது என்றால் அதற்கு தேவையான உடை மற்றும் மற்றும் தேவையான பொருட்களை வாங்குவார்கள். அதில் முக்கியமாக சோப்பு, எண்ணெய், ஷாம்பூ போன்றவை இருக்கிறது. இன்றைய பதிவில் குழந்தைகளுக்கன் ஷாம்புகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஷாம்பூ வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
குழந்தைகளுக்கான ஷாம்பூ வாங்கும் போது சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியமானதாகும். குழந்தைகளுக்கான ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்கும்போது, வயது, முடி வகை, உச்சந்தலையின் உணர்திறன் மற்றும் பொருட்கள் போன்றவை கவனித்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கும் மென்மையான ஷாம்பு தேவைப்படுகிறது, அது அவர்களின் மென்மையான தோல் மற்றும் கண்களை எரிச்சலடையச் செய்யாது. சுருள் அல்லது கரடுமுரடான கூந்தலைக் கொண்ட குழந்தைகள் ஈரப்பதமூட்டும் ஷாம்பு மூலம் பயனடைவார்கள், இது ஃப்ரிஸ் மற்றும் சிக்கலைக் குறைக்க உதவுகிறது. உணர்திறன் வாய்ந்த உச்சந்தலையில் உள்ளவர்கள் சல்பேட் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற கடுமையான இரசாயனங்கள் கொண்ட ஷாம்பூக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Parabens, Phthalates, Formaldehyde, Alcohol, Dyes, Sulfates and Synthetic Fragrance போன்ற ரசாயனங்கள் உள்ளதை தவிர்க்க வேண்டும்.
Sebamed Shampoo for Baby:
இந்த ஷாம்பூ ஆனது குழந்தைகளின் கண்ணை எரிச்சல் அடைய வைக்காது. இந்த ஷாம்பூவில் கண்களை எரிச்சலூட்டும் கெமிக்கலான Parabens / Paraffin / Propylene Glycol / Phthalates போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி
Aveeno Baby Shampoo:
aveeno ஷாம்பூவில் பாரபென்கள், சல்பேட்டுகள் அல்லது பித்தலேட்டுகள் போன்றவை இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீராய்டு போன்ற கெமிக்கல் இல்லை. அதனால் இவை தினசரி பயன்பாட்டிற்கு உகந்தவையாக இருக்கிறது.
Cerave Baby Shampoo
இந்த ஷாம்பூ ஆனது ஹைலூரோனிக் அமிலம் , வைட்டமின் ஈ, செராமைடுகள் போன்ற மூன்று தாதுக்கள் இருக்கிறது. மேலும் இவை கண்களை எரிச்சலடைய செய்யாது. குழந்தையை ஹேண்டில் செய்வதற்கு ஈசியாக இருக்கும்.
Spoo Shampoo Baby:
இந்த ஷாம்பூ ஆனது உச்சந்தலையின் pH அளவையும், முடியின் அமைப்பையும் பராமரிக்கும் போது மென்மையாக ஈரப்பதமாக்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
Cetaphil Baby Shampoo:
இந்த ஷாம்பூ ஆனது ph அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது. குழந்தைகளின் தோலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பிறந்த குழந்தைக்கு கூட இந்த ஷாம்புவை மருத்துவரை பரிந்துரைக்கிறார்கள். தினசரி பயன்பாட்டிற்கு உகந்தவையாக இருக்கிறது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |