குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்..!

child health care

குழந்தைகளுக்கு நோய் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்..!

குழந்தைகளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருக்கும், எனவே எளிதில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் (child health care) இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நாம் காண்போம்.

குறிப்பு 1:

குழந்தைகளை தினமும் குளிக்க வைக்கும்போது வசம்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் ஒன்றாக அரைத்து, குழந்தையின் உடல் முழுவதும் தடவி, வெந்நீரால் குளிக்க வைக்கவும்.

இவ்வாறு செய்வதினால், குழந்தைகளுக்கு எந்த ஒரு நோயும் வராமல் பாதுகாக்க (child health care) முடியும்.

குறிப்பு 2:

குழந்தையை குளிக்கவைத்த பிறகு, குழந்தையின் உடல் முழுவதும் அதாவது கை, கால் மற்றும் உடல் முழுபாகம் தேங்காய் எண்ணெயை தடவி விடவும், இவ்வாறு செய்வதினால் குழந்தையின் சளி இருந்தும் மற்றும் அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

குறிப்பு 3:

மஞ்சள் மற்றும் வசம்பு இரண்டையும் எரித்து, பொடியாக பொடித்து வைத்து கொள்ளவும். பின்பு இந்த பொடியை குழந்தையை குளிக்க வைத்தபிறகு குழந்தையில் கால் மற்றும் தொப்புள் பகுதியில் நன்றாக தடவி விடவும், இவ்வாறு செய்வதினால் குழந்தைக்கு தோல் சம்மந்தமான அனைத்து நோய்களையும் சரி செய்ய முடியும்.

குறிப்பு 4:

குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும்போது, வசம்பை எரித்து, அவற்றை தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் குழந்தையின் வயிற்று வலி சரியாகும்.

குறிப்பு 5:

குழந்தைக்கு வாரத்தில் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடல் உஷ்ணத்தை தணிக்க இயலும்.

குறிப்பு 6:

அதே போல் குழந்தையை  எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் போது, உரமருந்தை அவசியமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் குழந்தைக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி என்று அனைத்து சரியாகும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு pothunalam.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE