குழந்தையின் சுகாதார கோளாறுகளுக்கு பாட்டி வைத்தியம்..!

child health care tips tamil

குழந்தையின் சுகாதார கோளாறுகளுக்கு பாட்டி வைத்தியம் (Child health care tips tamil)..!

நம்முடைய தாத்தா / பாட்டி காலத்தில் குழந்தைகளுக்கு எதாவது உடல்நல கோளாறுகள் ஏற்பட்டால் அதற்கு வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் மூலிகை இலைகளை பயன்படுத்தி கைவைத்தியம் மூலமாக தான் குணப்படுத்துவார்கள். ஆனால் இப்போது எல்லாம் குழந்தைகளுக்கு லேசாக சளி, காய்ச்சல் வந்தாலே உடனே மருத்துவமனைக்கு கூட்டி கொண்டு செல்கின்றோம். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் தான் குழந்தைகளுக்கு குணமாகும் என்ற நம்பிக்கை நம்மிடம் அதிகம் உள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண உடல்நல பிரச்சனைகளுக்கு எல்லாம் மருத்துவரை தான் அணுகவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சில மூலிகை இலைகளை வைதே அந்த பிரச்சனைகளை சரி செய்துவிட முடியும். அவற்றை பற்றி இங்கு நாம் காண்போம் வாங்க…

குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..!

பொதுவாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் வருவதை நாம் தடுக்க முடியாது. அம்மாதிரியான பிரச்சனைகள் வந்தால் தான் உடல்நல பிரச்சனைகள் வந்தால் தான் குழந்தையின் உடல் சீராக இருக்கும். மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல் நலப் பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம், அதாவது பாட்டியின் கை வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதைப்பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம்:-

தும்மல், குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்:

child health care tips tamil – பொதுவாக குழந்தைகளுக்கு தும்மல், குளிர் மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது தண்ணீரை சுடவைத்து அதில் கற்பூரவல்லி இலை, துளசி, வெற்றிலை போட்டு குழந்தை தூங்கும் அறையில் வைக்கலாம்.

மேலும் தும்மல், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் போது, விக்ஸ் பயன்படுத்துவதற்கு பதில். சிறிதளவு தேங்காய் எண்ணெயில் இரண்டு கற்பூரத்தை சேர்த்து சுடவைத்து, குழந்தையின் நெஞ்சு, முதுகு, மூக்கு மற்றும் மார்பு போன்ற இடங்களில் சூடு பொறுக்கும் அளவில் நம் தேய்க்க வேண்டும்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

Child health care tips tamil – தும்மல், குளிர் மற்றும் காய்ச்சலுக்கான கஷாயம்:-

கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:-

  1. சிறிதளவு துளசி,
  2. சிறிதளவு கற்பூரவல்லி இலை
  3. காம்பு நீக்கிய வெற்றிலை – 1
  4. மொசுமொசுக்கை இலை – சிறிதளவு
  5. பூண்டு பற்கள் – ஒன்று
  6. கட்டிபெருங்காயம் – சிறிதளவு
  7. ஓமம் – ஒரு ஸ்பூன்
  8. சீரகம் – ஒரு ஸ்பூன்

செய்முறை:-

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி 5 மில்லி முதல், 10 மில்லி வரை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வரட்டு இருமல், தொடர் இருமல் கை வைத்தியம்:-

child health care tips tamil – குழந்தைகளுக்கு ஏற்படும் வரட்டு இருமல், தொடர் இருமலுக்கு மிளகு, அதிமதுரம், கடுக்காய் தோல் மூன்றையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை காலை, மாலை இருவேளைகளும் 5 கிராம் அளவுக்கு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வரட்டு இருமல், தொடர் இருமல் இரண்டும் சரியாகிவிடும்.

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..! 100% Increase breast milk…

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கு:-

Child health care tips tamil – வயிற்று பூச்சி:-

இரண்டு பற்கள் பூண்டு மற்றும் குப்பைமேனி இலை 2 இவை இரண்டையும் அரைத்து சாறுபிழிந்து, குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு கொடுப்பதினால் வயிற்று பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.

Child health care tips tamil – வயிறு உப்புசம்:

வயிற்றில் வாயு இருந்து வயிறு உப்பிசமாக தெரிந்தால் சிறிது பெருங்காயம் பொடி எடுத்து வெது வெதுப்பான நீரில் கரைத்து பேஸ்ட் போல் செய்து குழந்தையின் வயிற்றி தடவலாம். இவ்வாறு செய்வதினால் வயிறு உப்புசம் பிரச்சனை சரியாகிவிடும்.

Child health care tips tamil – குழந்தைகளுக்கு வயிற்று வலி வராமல் இருக்க:

குழந்தைகளுக்கு வயிற்று வலி வராமல் இருக்க சுடுநீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக கொடுக்கலாம். அதே போல் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பிலைச் சாற்றை குடிக்க கொடுக்கலாம். இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு வயிற்றி ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும்.

குளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..!

Child health care tips tamil – குழந்தையின் காய்ச்சலுக்கான வீட்டு வைத்தியம்:-

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் துளசி, இஞ்சி இரண்டையும் சம அளவு எடுத்து சாறு எடுத்து கொடுக்கலாம். இனிப்புக்காக தேன் கலந்து கொடுக்கலாம். அதிக காய்ச்சல் இருந்தால் குழந்தைகளுக்கு குளிர்ந்த நீரில் துணியை நனைத்து உடம்பை துடைத்து எடுக்கலாம். அதேபோல் நெற்றியில் சூடு அதிகமானால் வலிப்பு வந்துவிடும். எனவே ஈரத்துணியை நெற்றியில் வைக்கவும்.

குழந்தைக்கு இம்மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு முறை துளசி சாறு, இஞ்சி சாறு, வேப்பிலைச் சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு நோய் வருவதை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் நோயிலிருந்து குழந்தைகளை நம் வீட்டில் உள்ள சமையலறை பொருட்களை கொண்டே பாதுகாக்கலாம்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்