குழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..!

உடல் எடை குறைய

குழந்தையின் உடல் பருமன் குறைய டிப்ஸ் (குழந்தை பராமரிப்பு குறிப்புகள்)..!

குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும் (childhood obesity) இருக்க வேண்டும்.

சரி இப்போது குழந்தை பராமரிப்பு குறிப்புகள் என்ற தலைப்பில் குழந்தையின் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை

குழந்தைக்கு உடல்பருமனாக என்ன காரணம்:

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன்பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

குழந்தைக்கு உடல் எடை அதிகரித்தல் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்:

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறு வயதிலே இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிறு பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், சரும பிரச்சனைகளான ஆக்னி, பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

குழந்தைக்கு உடல் எடை அதிகமாக இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

  1. மருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம்.
  2. எடை குறைவு – பி.எம்.ஐ <18.5 ஆரோக்கியமான எடை – பி.எம்.ஐ 18.5 – 24.9 க்குள் இருக்க வேண்டும்.
  3. அதிக எடை – பி.எம்.ஐ 25 – 29.9 உடல்பருமன் – பி.எம்.ஐ 30 அல்லது அதை விட அதிகமாக இருந்தால் உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும்.

குழந்தையின் உடல் எடை குறைய உணவுகள் (Childhood Obesity Solutions):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 1

குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், டீடாக்ஸ் வாட்டர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 2

குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 3

குழந்தையின் உடல் எடை குறைய புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது, பால் சேர்க்காத பழச்சாறுகள் மயோனைஸ் சேர்க்காத சாலட் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துவர குழந்தையின் உடல் பருமனை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

குழந்தை உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

 

குழந்தையின் உடல்பருமனை குறைக்கும் (Childhood Obesity Solutions) ரெசிபி

பானம் செய்ய தேவையான பொருட்கள்:

  • கொடம்புளி – 1 இன்ச்

பானம் செய்முறை:

கொடம்புளியை பயன்படுத்தும் முன் கழுவ வேண்டும். இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட வேண்டும். மறுநாள் காலை அதை எடுத்து மண் பானை அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.

அதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும். அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.

மிதமான தீயிலே 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும். இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி ஜாரில் இவற்றை ஊற்றி வைக்கவும். குழந்தையின் உடல் எடை குறைய பானம் தயார் செய்துவிட்டோம்.

பானம் எப்படி அருந்துவது?

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

காலை உணவு சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பு இதைக் குடிக்கவும்.

அதுபோல மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அரை மணி நேரத்துக்கு முன் இதை ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து விட வேண்டும். இவ்வாறு குழந்தைக்கு கொடுப்பதினால் குழந்தையின் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

என்னென்ன விதிமுறைகள்?

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – போதுமான அளவு தண்ணீரும் அருந்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.– 3 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். 2 மாதம் தொடர்ந்து இந்த கொடம்புளி டிரிங்கை செய்து குடிக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை (Childhood Obesity Solutions) மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்