வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அழுகும் குழந்தையை அமைதிப்படுத்த சூப்பர் வழி..!

Updated On: January 22, 2022 7:32 AM
Follow Us:
crying baby
---Advertisement---
Advertisement

அழுகும் குழந்தையை அமைதிப்படுத்த சிறந்த இரண்டு வழிகள்..!

நம்மில் சிலருக்கு அழுகும் குழந்தைகளை பார்த்தாலே அந்த குழந்தையின் பக்கம் கூட செல்லமாட்டோம். ஏன் என்றால் அந்த குழந்தையின் அழுகையை (crying baby) எப்படி நிறுத்துவது என்று நமக்கு தெரியாது.

ஆனால் அழுகும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு மிக எளிய வழிகள் இவற்றில் இருக்கின்றன அவ்வாறு செய்தாலே அழுகும் குழந்தையின் அழுகையை (crying baby) நிறுத்திவிட முடியும்.

சரி அப்படி என்ன எளிதான வழிகள் இருக்கின்றன என்று இவற்றில் நாம் காண்போம்.

அழுகும் குழந்தையின் அழுகையை நிறுத்த சிறந்த இரண்டு வழிகள்:

குழந்தையின் உடலில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றன. அந்த இரண்டு புள்ளிகளை வைத்து அழுத்தினால் போதும்… குழந்தை அழுகையை (crying baby) நிறுத்திவிடும்.

அப்படி எந்த இரண்டு புள்ளிகளை வைத்து அழுத்த வேண்டும்?

குழந்தைக்கு பேசும் வயது வரும் வரை குழந்தை அழுகை மூலமாகத்தான் பெற்றோர்களிடம் தொடர்பு கொள்ளும்.
பசியாக இருந்தாலும், வேறு ஏதேனும் பிரச்சனையாக இருந்தாலும், அசதியாக இருந்தாலும் அழுகை மூலம்தான் வெளிப்படுத்தும்.

சில நேரங்களில் குழந்தைக்கு தலைவலி வந்தால் அப்போது குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியாது.

பலமணி நேரங்கள் வரை அழுதுகொண்டே இருக்கும் அப்போது அந்த நேரங்களில் இந்த இரண்டு முறைகளையும் செய்தாலே போதும். குழந்தையின் அழுகையை கண்டிப்பாக நிறுத்திவிட முடியும்.

1. குழந்தை நிறுத்தாமல் அழுதுகொண்டே இருக்கும்போது குழந்தையின் இரண்டு கால்களின் பெருவிரல் பகுதியையும் சுமார் 3 நிமிடங்கள் உங்கள் கை பெருவிரலால் நன்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு உண்டான தலைவலி சரியாகிவிடும்.

2. பெரும்பாலும் குழந்தைகள் அழுவது வயிற்று வலியால் தான். குடித்த பால் செரிமானம் ஆகாமல் இருந்தாலும் வயிற்று வலி உண்டாகும். அதனால் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் குழந்தையின் பாதத்தின் மையப்பகுதியில் கையின் பெருவிரலை வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த இரண்டு முறையையும் கையாண்டால் எப்பேர்ப்பட்ட குழந்தையின் அழுகையாக இருந்தாலும் நிறுத்திவிடலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now