DPT என்றால் என்ன.? எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Advertisement

DPT Vaccine in Tamil

குழந்தை பிறந்ததும் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும் போதே தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அட்டவணையில் பதிவிட்டு வழங்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி மூலம் குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை தாக்கப்படும் நோய்களிலுருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இதில் முக்கியமானது எந்தெந்த நாட்களில் தடுப்பூசிகளை போட வேண்டுமோ அதை தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது. அது போல ஒவ்வொரு தடுப்பூசியும் எதற்காக போடப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் DPT தடுப்பூசி பற்றி அறிந்து கொள்வோம்.

DPT என்றால் என்ன.?

DPT = Diphtheria, pertussis  and tetanus.

டிபிடி என்பது டிஃப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் வராமல் தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் பாக்டீரியாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்களாக இருக்கிறது.

டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகியவை காற்று, நீர், தொடுதல், இருமல், தும்மல் மற்றும் பிற முறைகள் மூலம் நபருக்கு நபர் பரவுகின்றன, அதேசமயம் டெட்டனஸ் பாக்டீரியா வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.

டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் என்றால் என்ன.?

DPT என்றால் என்ன

டிப்தீரியா தொண்டை  பிரச்சனை,சுவாசப் பிரச்சனைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

டெட்டனஸ் ஒரு பாக்டீரியா தொற்று. இது தசைகள் வலிமிகுந்த இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. தாடையனாது செயல்இழுக்கப்பட்டு வை திறக்க முடியாமல் செய்கிறது. டெட்டனஸ் உலகளவில் 10% உயிரைக் கொல்கிறது. ஒழிப்பை இந்தியா நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கர்நாடகாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

பெர்டுசிஸ் நோய் ஏற்பட்டால் குழந்தைகளால் சாதாரணமாக சுவாசிக்க முடியாது. தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் இருமலோடு வாந்தி பிரச்சனையையும் ஏற்படுத்தும். மேலும் இவை தொடர்ந்து நீடிக்கப்பட்டு தண்ணீர் குடிப்பபதில் பிரச்சனை, உணவு சாப்பிடுவதில் பிரச்சனை போன்றவையே ஏற்படுத்தும். இவற்றை கவனிக்காம விட்டால் நுரையீரலில் அலர்ஜியைஏற்படுத்தும். மேலும் நிமோனியா காய்ச்சல் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

குழந்தையின் மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு வைத்தியம்…!

DPT தடுப்பூசி போடுவது எப்போது:

இந்த ஊசியானது ஐந்து அளவுகளில் வழங்கப்படுகிறது. அதனை பற்றி காண்போம்.

2 மாதங்கள்
4 மாதங்கள்
6 மாதங்கள்
15 முதல் 18 மாதங்கள்
4 முதல் 6 ஆண்டுகள்

மேல் கூறப்பட்டுள்ள அளவுகளில் DPT தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.

DPT தடுப்பூசி பக்க விளைவுகள்:

ஊசி போட்ட இடத்தில் சிவத்தல் அல்லது அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு காணப்படும்.

காய்ச்சல் ‘

பசியின்மை

தூக்கம்

எரிச்சல்

வாந்தி

வலிப்பு

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்

 

Advertisement