குழந்தைகளுக்கு அசைவங்களை எப்போது கொடுக்கலாம்..! Non Veg food For Baby..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தாய்மார்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய பதிவை இன்று நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். குழந்தைகளுக்கு அசைவ உணவு(Feed Non Veg Foods For baby) முறைகளை எப்போது கொடுத்து பழகலாம் என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..! |
குழந்தைக்கு முட்டை எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்:
குழந்தைக்கு தாய்மார்கள் முட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் காலை நேரத்தில் அல்லது மதிய நேரங்களில் மட்டுமே குழந்தைக்கு முட்டையை கொடுக்க வேண்டும். அந்த நேரங்களில் கொடுத்தால் தான் குழந்தைக்கு செரிமானம் சீராக இருக்கும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் கொடுத்தால் செரிமான பிரச்சனை ஏற்படும். அதனால் இந்த நேரத்தை தவிர்த்து கொள்ளவேண்டும்.
கறி ஈரல் குழந்தைக்கு எப்போது கொடுக்கலாம்:
குழந்தைக்கு கறியில் இருக்கும் ஈரலை கொடுக்கும் போதும் காலை மற்றும் மதிய நேரத்தில் கொடுக்க வேண்டும். அதாவது மதிய நேரத்தில் குழந்தைக்கு 2 மணிக்குள் ஈரலை கொடுக்க வேண்டும். அதற்கு மேல் குழந்தைக்கு கொடுத்தால் செரிக்காமல் பிரச்சனை வரும் என்பதால் தவிர்த்து கொள்ளலாம்.
குழந்தைக்கு ஆட்டுக்கால் சூப் எப்போது கொடுக்க வேண்டும்:
குழந்தைக்கு மாலை 5 மணிவரை சூப் வகைகளை தாராளமாய் கொடுக்கலாம். ஆட்டுக்கால், நெஞ்ஜெலும்பு சூப் குழந்தைக்கு கொடுக்கும் போது இஞ்சியை தவறாது சேர்த்து கொடுக்க வேண்டும்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..! |
மீன் குழந்தைக்கு எப்போது கொடுக்க வேண்டும்:
குழந்தைக்கு மீன் வகைகளையும் மாலை 5 மணி வரை கொடுக்கலாம். அதற்கு மேல் கொடுப்பதை நிறுத்தி கொள்ளலாம். குழந்தைக்கு பசி எடுத்த பிறகு அசைவ உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதால் அசைவ உணவுகளை அதிகமாகவும் கொடுக்க கூடாது.
இரவு நேரத்தில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மருந்து:
குழந்தைக்கு அசைவ உணவுகளை கொடுக்கும் போது மறக்காமல் இரவு குழந்தை தூங்கும் முன்பு உரசு மருந்து கொடுத்து தூங்க வைக்க வேண்டும். இரவு நேரத்தில் குழந்தைக்கு அசைவ உணவு கொடுப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும்.
இரவு நேரங்களில் குழந்தைக்கு உரசு மருந்து கொடுப்பதால் வயிற்று வலி பிரச்சனை இருக்காது.
1 வயது குழந்தை உணவு வகைகள்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |