குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Food For Baby Brain Development in Tamil

பொதுவாக ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம் எனது குழந்தை நன்றாகத்தான் படிக்க முயற்சிக்கிறான், ஆனால் அவனால் ஒழுங்காகவே நியாபகம் வைத்து கொள்ள முடியவில்லை அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறிக் கவலைபடுவதை பார்த்திருபோம். இந்த கவலை உங்களுக்கும் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 உணவுகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Food For Child Brain Development in Tamil:

Food For Child Brain Development in Tamil

பொதுவாக குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்க உதவும் 5 உணவுகளை பற்றி விரிவாக காணலாம்.

1. முட்டை:

Food For Baby Brain Development

முட்டையில் மூளையின் வளர்ச்சிக்கு உதவும் கோலின், வைட்டமின் பி12 மற்றும் புரதம் ஆகியவை உள்ளது. அதிலும் குறிப்பாக முட்டையில் உள்ள கோலின் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

ஒரு நாளைக்கு இரண்டு முழு முட்டைகளாவது கொடுப்பது 8 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் கோலைனை வழங்குகிறது. 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

2. கடல் உணவு:

Food For Child Brain Development in Tamil

பொதுவாக கடல் உணவுகளில் உள்ள புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் போன்றவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

அதிலும் குறிப்பாக எண்ணெய் மீன், இறால், சால்மன், திலபியா, நண்டு மற்றும் காட் போன்ற கடல் உணவுகளை குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வழங்குவது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

3. கீரை வகைகள்:

How to increase brain power of child in tamil

பொதுவாக கீரைகளில் உள்ள இரும்பு சத்து மற்றும் ஃபோலேட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

அதிலும் குறிப்பாக கீரைகளில் உள்ள ஃபோலேட்டின் சரியான அளவு கிடைக்காத குழந்தையை விட, போதுமான அளவு ஃபோலேட் கிடைக்கும் குழந்தைகள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பல ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றது.

மேலும் கீரையில் உள்ள இரும்புசத்து கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பொறுப்பான மூளையின் பகுதியான ஹிப்போகாம்பஸின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு டிப்ஸ்

4. தயிர்:

How to increase brain power of child

தயிரில் உள்ள புரதம், ஜிங்க், கோலின் மற்றும் அயோடின் போன்ற சத்துக்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது. தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய குழந்தைகளுக்கு அயோடின் அதிக அளவில் தேவைப்படுகிறது.

அது மூளை வளர்ச்சி மற்றும் நரம்பியல் செயல்முறைகளுக்கு இன்றியமையாத ஹார்மோன் ஆகும். லேசான அயோடின் குறைபாடு கூட குழந்தையின் ஒட்டு மொத்த அறிவாற்றல் செயல்பாடு மற்றும் பகுத்தறியும் திறனை பாதிக்கலாம்.

அதனால் தினமும் குழந்தைகளின் உணவில் தயிரினை சேர்த்து கொள்ளும் வகையில் செய்யுங்கள்.

5. உலர் உணவு பொருட்கள்:

Food For Baby Brain Development in Tamil

உலர்ந்த உணவு பொருட்களில் புரதம், புரோட்டீன் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக புரோட்டீன் மற்றும் துத்தநாகம் ஆகியவை ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் அதிக நினைவாற்றல் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களிக்கின்றது.

இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

 

Advertisement