இரட்டை குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Advertisement

Food To Eat For Having Twins in Tamil

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறது என்றால், அந்த வீட்டில் இருக்கும் அனைவருமே அந்த பெண்ணை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வார்கள்.

காரணம் குழந்தை பிறப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. குழந்தை பிறப்பது என்பது பெண்களுக்கு கிடைத்த வரம். அதுபோல குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக இரட்டை குழந்தை பிறக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா..

இரட்டை குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

இரட்டை குழந்தைகள் பிறக்க ஜீன்கள் மட்டும் காரண மல்ல. ஒரு சில உணவுகளின் மூலமும் ஆரோக்கியமான இரட்டை குழந்தைகளைப் பெற முடியும். நல்ல ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்டாலும் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால் இரட்டை குழந்தைகள் பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

பால் பொருள்கள்:

பொதுவாக கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற பால் பொருள்களை உட்கொள்ள வேண்டும். அதிலும் ஆய்வின் படி, குறைவான பால் பொருள்கள் எடுத்துக் கொள்ளும் பெண்களுடன் ஒப்பிடும் போது, அதிக பால் பொருள்களை உட்கொள்ளும் பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி என்று அழைக்கப்படுகிறது.

  • பால் பொருள்களில் இருக்கும் பண்புகள் குறிப்பிட்ட புரதத்தை அதிகரிக்கிறது.
  • இந்த புரதங்கள் பசும்பாலில் அதிகம் உள்ளது.
  • எனவே, அதிக பால் பொருள்களை உட்கொள்ளும் போது கருப்பைகள் அதிக முட்டைகளை வெளியிடுவதற்கான வாய்ப்பு அதிகம்.
  • ஆகவே இது இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதை அதிகரிக்கிறது.

இரட்டை குழந்தை கர்ப்ப அறிகுறிகள்

கிழங்கு வகைகள்: 

பொதுவாக கிழங்கு வகைகள் அதிகமாக சாப்பிட்டால், இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கிழங்கில் அதிகமாக பைட்டோ எஸ்ட்ரோஜென் (Phyto- Est Rogens) மற்றும் ப்ரோஜெஸ்ட் ரோன் (Proges- Terone) இருக்கிறது. அது கருப்பையில் அதிகமாக முட்டையை தங்க வைக்க உதவும். அதனால் தான் அதிகமாக கிழங்கு சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.

போலிக் ஆசிட் உணவுகள்: 

போலிக் ஆசிட் உணவுகளால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. காய்கறிகள் போன்ற பீன்ஸ், கீரைகள் மற்றுட் பீட்ரூட் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. ஆகவே இந்த போலிக் ஆசிட் உணவுகளை அதிகமாக உண்பதால், 40% அதிகமாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குழு கண்டுபிடித்துள்ளது.

குறைவான கார்போஹைட்ரேட்:

கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளான தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகள். இவை கருமுட்டையின் அளவை அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் இந்த உணவுகளை உண்டால் எந்த ஒரு நரம்பு குழாயில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

இரட்டை குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா..

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement