குழந்தை நல பரிசு பெட்டகத்தில் உள்ள பொருட்கள்

Advertisement

தாய் சேய் நல பரிசு பெட்டகத்தில் உள்ள பொருட்கள்!

ஜெயலலிதா அவர்கள் ஆட்சியின் போது நிறைய திட்டங்களை ஆரம்பித்துள்ளார் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. மேம்படுத்தப்பட்ட நிதி உதவி, மாதவிடாய் சுகாதாரத் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் அதனை தொடர்ந்து ஆரம்பித்ததுதான் இந்த குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டம். அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூபாய் 1000 மதிப்பிலான “அம்மா பேபி கிஃப்ட் பாக்ஸ்” வழங்கப்பட்டு வருகிறது.

அம்மாவின் ஆட்சியின் பொது அத்திட்டத்தை அம்மா பேபி கிஃப்ட் பாக்ஸ்/ அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்பொழுது அதனை தாய் சேய் நல பரிசு பெட்டகம் என்று மாற்றியுள்ளனர்.

Govt baby kit for newborn 

இந்த தாய் சேய் நல பரிசு பெட்டகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 16 ஆகும், அவையாவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

  • பராமரிப்புத் துண்டு
  • குழந்தைக்கான உடை
  • குழந்தை படுக்கை
  • கொசு வலை
  • குழந்தை நாப்கின்
  • குழந்தை எண்ணெய் (100 மில்லி லிட்டர்)
  • குழந்தை ஷாம்பூ (60 மில்லி லிட்டர்)
  • குழந்தை சோப்பு
  • தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு
  • சோப்புப் பெட்டி
  • கை கழுவும் திரவம் (250 மில்லி லிட்டர்)
  • நக வெட்டி
  • கிலுகிலுப்பை
  • பொம்மை
  • ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம்
  • பரிசு பெட்டகம்

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி

இந்த தாய் சேய் நல பரிசு பெட்டகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் மிகவும் தேவையானதாகும். இந்த பதிவை பார்ப்பதன் மூலம் நீங்கள் முழுவதுமாக Kulanthai Parisu Pettagam List என்னவென்று தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 

 

Advertisement