குழந்தைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனையை சரி செய்வதற்கு பாட்டி வைத்தியம்..!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை, குழந்தை வாய்திறந்து பேசும் வரை எதற்காக அழுகிறது என்றே தெரியாது. இருப்பினும் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு பொதுவாக நாம் மருத்துவரை தான் நாடுவோம், இருப்பினும் குழந்தையின் (baby cold) சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு நம் பாட்டி வைத்தியம் பயனுள்ளதாக இருக்கிறது.
சரி வாங்க குழந்தையின் சளி பிரச்சனையை ஒரே நாளில் குணப்படுத்த என்ன பாட்டி வைத்தியம் உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு ஓமவல்லி இலை மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த ஓமவல்லி இலையை வைத்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு இயற்கை டானிக் செய்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- ஓமவல்லி இலை – 4
- குப்பைமேனி இலை – 6
- வெற்றிலை – 1
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- மிளகு – 4
- உப்பு – இரண்டு கல்
செய்முறை:
முதலில் ஓமவல்லி இலை, வெற்றிலை மற்றும் குப்பைமேனி இலை ஆகியவற்றை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும், அவற்றில் சுத்தம் செய்து வைத்துள்ள ஓமவல்லி இலை, குப்பைமேனி இலை, வெற்றிலை, நான்கு மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம் மற்றும் இரண்டு கல் உப்பு சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். (தண்ணீர் அதிகம் சேர்த்துவிட கூடாது)
பின்பு அரைத்த இந்த கலவையை ஒரு வடிகட்டிய கொண்டு வடிகட்டவும் அவ்வளவுதான் பாட்டியின் இயற்கை டானிக் தயார்.
இந்த டானிக்கை குழந்தைகளுக்கு காலை வெறும் வயிற்றில் அரை சங்களவு கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இந்த இயற்கை டானிக்கை கொடுக்கும்போது குமட்டி விடுவார்கள், அதற்கு கவலைப்பட வேண்டாம், குழந்தை குமட்டும் போதே பாதி சளி வெளியே வந்து விடும்.
பின்பு உள்ளே சென்ற பாதி மருந்தும் குழந்தையின் சளி பிரச்சனையை முழுமையாக குணமாக்கிவிடும்.
குறிப்பு: குழந்தைகளுக்கு இந்த கஷாயத்தை கொடுக்கும் போது மிதமான சூட்டில் சுடவைத்து கொடுக்கவும். குழந்தை என்பதால் இந்த கஷாயத்தை அரை சங்களவு கொடுத்தால் போதுமானது. அதேபோல் இந்த இயற்கை டானிக்கை பெரியவர்கள் கூட காலை வெறும் வயிற்றில் அருந்தும் போது சளி மற்றும் இருமல் (baby cold) பிரச்சனை சரியாகும்.
கற்பூரம்:
தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.
மஞ்சள்:
விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்…
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குடிக்கும் பாலுடன் இந்த மஞ்சள் தூளை கலந்து கொடுத்தாலும் குழந்தையின் சளி (baby cold) பிரச்சனையை சரி செய்து விட முடியும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.