குழந்தையின் மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு வைத்தியம்…!

Advertisement

குழந்தை மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்

பொதுவாக குழந்தைகளை பொறுத்தவரை எது நல்லது, கெட்டது என்ற தெரிந்து கொள்ளும் அல்லது புரிந்துகொள்ளும் பக்குவம் என்பது அவ்வளவாக இருக்காது. ஏனென்றால் அவர்களது உடல் நலம் எப்படி உள்ளது என்றும், அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் இவை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியது பெற்றோர்கள் மற்றும் வீட்டில் வசிப்பவர்களின் பொறுப்பே ஆகும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல், காய்ச்சல், மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி என இத்தகைய பிரச்சனையே அதிகமாக காணப்படும். இவ்வாறு பிரச்சனைகள் வரும் போது அதனை எப்படி குணப்படுத்தலாம் என்று அனைவரும் யோசிப்பார்கள். அந்த வகையில் இன்று குழந்தை மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப்போகிறோம்.

குறிப்பு: குழந்தைகளுக்கு எந்த உணவு அல்லது மருந்துகள் கொடுக்க வேண்டும் என்றாலும் அதனை மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே கொடுக்க வேண்டும்.

Home Remedies for Baby Constipation in Tamil:

நார்சத்து மிக்க உணவுகள்:

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது அதிகமாக நார்சத்து உள்ள பேரீச்சம்பழம், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் என இதுபோன்ற உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம்.

ஏனென்றால் நார்சத்து உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை ஆனது எளிதில் சரியாகிவிடும்.

  • வாழைப்பழம்
  • தயிர்
  • ஸ்ட்ராபெரி
  • ஆளிவிதை

 குழந்தை மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்

மேலே சொல்லப்பட்டுள்ள மூன்றிலும் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனை நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்டுடன் 1 ஸ்பூன் ஆளி விதையை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். பின்பு அதனை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கொடுப்பதன் மூலம் குழந்தையின் மலச்சிக்கல் ஆனது விரைவில் குணமாகிவிடும்.

வெதுவெதுப்பான நீர்:

குழந்தை மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

தினமும் காலையில் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரினை குழந்தைக்கு குடிக்க கொடுங்கள். அதன் பிறகு நன்றாக நீரில் ஊற வைத்த உலர் திராட்சையையும் காலையில் 5 கொடுங்கள். இப்படி கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்பட்ட மலச்சிக்கல் ஆனது நீங்கி விடும். மேலும் தினமும் இதுபோன்ற பிரச்சனை இருக்காது.

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement