குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குறைய சிறந்த 8 கைவைத்தியம்..!
பொதுவாக குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் சளி, இருமல், தும்மல் என்று பிரச்சனை வருவது சாதாரண விஷயம் தான். பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகளவு இந்த வறட்டு இருமல் பிரச்சனை பாதிக்கிறது. அதுவும் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் போதும் இரவு முழுவதும் இருமி கொண்டே மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்த பிரச்சனைக்காக மருத்துவரை நாடுவதை விட, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி எப்படி குழந்தையின் வறட்டு இருமலை (varattu irumal for child in tamil) குணப்படுத்துவது என்று இந்த பகுதியில் நாம் காண்போம்.
குழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்..! |
குழந்தைக்கு வறட்டு இருமல் குறைய கைவைத்தியம்:-
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 1
உங்கள் குழந்தை வறட்டு இருமலால் தினமும் இரவு முழுவதும் கஷ்டப்படுகிறதா? இனி கவலைய விடுங்க இந்த கைவைத்தியத்தை செய்யுங்க.
varattu irumal for child: அதாவது கொள்ளுப்பயிரை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின்பு மிளகு, சுக்கு மற்றும் பூண்டு ஆகியவற்றை இடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்த உடன் பொடி செய்து வைத்திருக்கும் கொள்ளுப்பயிரையும், இடித்து வைத்திருக்கும் கலவையையும் ஒவ்வொரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை என்று ஒரு வாரம் வரை உங்கள் குழந்தைக்கு கொடுத்து வந்தால் வறட்டு இருமல் (varattu irumal for child in tamil) பிரச்சனை சரியாகும்.
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 2
பொதுவா சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது வைட்டமின் C சத்து அதிகளவு தேவைப்படும்.
அப்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து, மிதமான சூட்டில் கலந்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தையின் வறட்டு இருமல் (Child cough) பிரச்சனை சரியாகும்.
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 3
அரைவிரல் அளவுக்கு இஞ்சியை எடுத்துக்கொள்ளவும். அவற்றை அரைத்து கொள்ளவும், பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.
பின்பு அரைத்து வைத்திருந்த இஞ்சியை அவற்றில் சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
பிறகு கொதித்த நீரை வடிக்கட்டி கொண்டு மிதமான சூட்டில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை உங்கள் குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தையின் வறட்டு இருமல் (Child cough) பிரச்சனை சரியாகும்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..! |
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 4
உலர்திராட்சையை வாங்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கெட்டியாகும் வரை நன்றாக கொதிக்க வைத்து தினமும் உங்கள் குழந்தைக்கு கொடுத்து வந்தாலே போதும் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 5
குழந்தைகளுக்கு வறட்டு இருமல் பிரச்சனை வரும்போது புதினா சூப் அல்லது புதினா சாதம், புதினா துவையல் என்று கொடுத்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 6
குழந்தைக்கு வறட்டு இருமல் பிரச்சனை ஏற்படும் போது மாதுளை சாறில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி ஆகியவற்றை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 7
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப்படும் திப்பிலியை வாங்கி கொள்ளவும். அவற்றை பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
தினமும் குழந்தைகளுக்கு இந்த திப்பிலி பொடியில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
குழந்தை வரட்டு இருமல் குணமாக கைவைத்தியம்: 8
150 கிராம் வெங்காயத்தை எடுத்து அவற்றை மிக்சியில் சிறிதளவு தண்ணீர் கலந்து அரைத்து கொள்ளவும்.
பிறகு அந்த வெங்காய சாறில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக பாகு பதத்திற்கு காய்ச்சி தினமும் குழந்தைக்கு 3 வேளை கொடுத்து வந்தால் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ? |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |