உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும்..!

Advertisement

Homemade Gripe Water for Babies in Tamil 

பொதுவாக குழந்தைகள் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் தங்கள் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிட மறுகிறார்கள் என்பதுதான். அப்படி உங்கள் குழந்தை ஒழுங்காக சாப்பிட மறுகிறது என்றால் உங்கள் குழந்தைக்கு சளி, குடல் புழுக்கள் அல்லது அவர்கள் சாப்பிட்ட உணவு எதும் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற காரணங்களாகவே இருக்கும்.

அப்படி உங்கள் குழந்தைக்கு ஏற்படும் வயிறு பிரச்சனைக்கு இந்த பதிவில் கூறியுள்ள ஒரு மருந்து மட்டும் போதும். அது என்ன மருந்து அதனை எவ்வாறு தயாரிப்பது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் காணலாம்.

Home made Gripe Water Ingredients in Tamil:

Home made Gripe Water Ingredients in Tamil

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வயிற்று பிரச்சனைகளுக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் கிரேப் வாட்டர் தயார் செய்து தாருங்கள். மேலும் வீட்டிலேயே இயற்கை முறையில் கிரேப் வாட்டர் எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமம் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. பூண்டு – 2 பற்கள் 
  3. சுக்கு – 1 சிறிய துண்டு 
  4. பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

 குழந்தைகளுக்கு பசியை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்கள் 

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ஓமம், 1 சிறிய துண்டு சுக்கு, மற்றும் 2 சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு வறுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதனை உரலில் அல்லது மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 ml அளவு தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக்கொள்ளுங்கள்.

அந்த தண்ணீரில் நாம் தயார் செய்து வைத்துள்ள பொடி மற்றும் 2 பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து நாம் ஊற்றியுள்ள 100 ml தண்ணீர் 25 ml ஆகும் வரையில் நன்கு கொதிக்கவிடுங்கள்.

அது நன்கு கொதித்த பிறகு அதனை மற்றொரு பாத்திரத்தில் வடிக்கட்டி பின்னர் அதனை குழந்தைக்கு கொடுங்கள். இந்த மருந்தினை 1 வயது அல்லது 2 வயது குழந்தைகளுக்கு குடுக்கும் பொழுது மட்டும் அதில் சிறிதளவு தேன் சேர்த்து கொடுங்கள்.

1 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தினை அளிக்கும் பொழுது தேன் சேர்க்க வேண்டாம்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்

 

Advertisement