குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி..?

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை வளர்ப்பு முறைகள்

அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க சில டிப்ஸ்:

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கையாளுவது இந்த காலத்தில் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய காரியமாகும்.

இவ்வாறு அடம்பிடிக்கும் குழந்தைகளை கையாளும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

குழந்தையை சரியாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

அதுமட்டுமில்லாமல் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அவர்களை வளர்க்க வேண்டும்.

சரி வாருங்கள் இவற்றில் படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்று காண்போம்.

இதையும் படியுங்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்?

குழந்தை வளர்ப்பு முறைகள்

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :1

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பதற்கு முதலில் பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தையிடம் அன்புடன் செயல்பட வேண்டும்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :2

குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களை ஒவ்வொரு பாடத்துக்கும் பெயராக வைத்து, டோரா பாடம் முடிந்ததா? சோட்டா பீம் எங்கே? என்று அவர்களிடம் கேட்கலாம். அது குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

இதுபோன்ற விஷயங்களைப் பள்ளிக்குப் போய் உடன் பயிலும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். மற்ற குழந்தைகளும் ஆர்வத்துடன் அதைச் செய்வார்கள்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :3

சில வீட்டில் குழந்தைகளை டியூசன் அனுப்புவார்கள். அங்கேயே குழந்தைகள் வீட்டுப்பாடத்தை முடித்து விடுவார்கள். அந்த தவறை மட்டும் இனிமேல் செய்யாதீர்கள்.

டியூசனில் வீட்டுப்பாடம் செய்யும்போது ஏதேனும் புரியாமல் இருந்தால் நண்பர்களிடம் பார்த்து அப்படியே காப்பி அடித்து விடுவார்கள். அதற்கடுத்து சுயமாக பாடம் எழுதுவதில் ஆர்வமில்லாமல் போய்விடும்.

எனவே என்ன வீட்டுப்பாடம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்கள் டைரியை பார்க்காமல், குழந்தையிடம் நேரடியாகக் கேட்டு அவர்களின் வாயால் சொல்லச்சொல்லி கேளுங்கள்.

மேலும் அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இண்டர்நெட்டில் தேடி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் ஆர்வமாக ஹோம்வொர்க் செய்ய, நீங்களும் கொஞ்சம் ஹோம்வொர்க் செய்வது ஒன்றும் தவறல்ல.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :4

படிக்க செல்லும் குழந்தைகளிடம் ஒரு பாடத்தை இவ்வளவு நேரத்துக்குள் முடிக்க சொல்லி அலாரம் வையுங்கள். அலாரம் அடிப்பதற்கு முன்னே முடித்து விட்டால் ஏதேனும் பரிசு கொடுங்கள்.

இதே போன்று வாரம் முழுவதும் வேகமாக செய்து முடித்தால், அவர்கள் விரும்பும் முக்கியமான ஏதேனுமொன்றை பரிசாகக் கொடுங்கள்.

அந்த ஆர்வத்திலேயே தினமும் வேகமாக படிக்க மற்றும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.

இதையும் படியுங்கள் குழந்தை நலன் – தொப்புள் கொடி பற்றிய நம்பமுடியாத தகவல்கள்..!

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :5

குழந்தையின் அறிவு திறனை அதிகரிக்க திடீரென எங்காவது பிக்னிக் அழைத்து செல்லலாம்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :6

குழந்தைகளின் மூளை தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை தான் கவனச்சிதறலின்றி இருக்கும்.

அதனால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிதாக ஓய்வு கொடுங்கள். அதற்காக அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ வீடியோ கேம் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :7

குழந்தைகளின் சிறிய சிறிய நல்ல காரியங்களை கூட எப்போதும் ஊக்குவித்து பாராட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

வாயின் வழியாக பாராட்டுவதை விட ஏதேனும் சிறிய பரிசாக இருந்தாலும் அவர்களிடம் கொடுத்து மகிழ்ச்சி படுத்த வேண்டும்.

இது ஒரு சிறந்த வழியாக அமையும். அவர்களை அன்புடன் பாராட்டும் போது அவர்களும் உங்கள் வழிக்கு வருவார்கள்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் :8

உடனுக்குடன் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பது உண்மையில் நடக்காத காரியமாகும். குழந்தைகள் இத்தகைய மாற்றங்களை உடனடியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் பொறுமையாக உங்கள் திட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம், எப்படி இத்தகைய பிள்ளைகளை சமாளிப்பது என்ற கேள்விக்கான விடைகளை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

இதையும் படியுங்கள் குழந்தை வளர்ப்பு முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகள் !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com