குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

Advertisement

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் | How to Choose names for new born baby

வணக்கம், இந்த பகுதியில் எப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதை காண்போம். நிறைய பேருக்கு குழந்தை பிறந்தவுடன் வரும் முதல் குழப்பங்கள், என்ன பெயர் குழந்தைக்கு வைக்கலாம் என்பதுதான்.

இதில் நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் பெயர் ஜாதக ரீதியாக இருக்க வேண்டும் என்றும், சில பெற்றோர்கள் தங்களின் தாத்தா, பாட்டி, தமிழ் பெயர், குலதெய்வத்தின் பெயர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்குள் நாம் போகவில்லை.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்.? 

எப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் கல்வி, செல்வம், புகழ், உயர்வு, நோயின்மை ஆகியவை கிடைக்கப்பெறும் என்பதை இப்போது காண்போம்.

பிறந்த குழந்தைக்கு பெயர்: ஒரு குழந்தை பிறக்கிறது, ஆணோ, பெண்ணோ அதற்கு பெற்றோர்கள் எந்த பெயர் வைத்தாலும் அதில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தெய்வத்தின் பெயரை நேரடியாக வைக்க வேண்டாம். உதாரணத்திற்கு ஜெயலட்சுமி, ஜோதிலட்சுமி என்று வைக்க வேண்டாம்.

Pirantha kulanthai peyar vaipathu eppadi

சரி எப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்..?

  • மூன்று மிக முக்கியமான விஷயங்களை பார்த்து நம் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.
  • அதில் ஒன்று பிறந்த குழந்தையின் நட்சத்திர எழுத்து. இரண்டாவது தமிழ் சொற்களான நெடிலில் இருக்க வேண்டும், மூன்று ஒரே பெயரில் தான் முடிய வேண்டும்.
  • முதலில் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு எழுத்து இருக்கின்றது. அதையும் நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • அதில் ஒன்றைத் தான் நாம் குழந்தைக்கு பெயராக வைக்க வேண்டும். பொதுவாக நட்சத்திரத்தில் பெயர் வைக்கும் போது நிறைய பாதகங்கள் இருக்காது.
  • இரண்டாவதாக தமிழில் குறில், நெடில் என்று இருக்கிறது. பெயர்களை வைக்கும்போது நெடில் பெயர்களை தான் வைக்க வேண்டும்.
  • அதிலும் பெயர்களில் முதலில், நடுவில், கடைசியில் கண்டிப்பாக நெடில் சொற்கள் இருக்க வேண்டும் மற்றும் அதன் பொருள் தெரிந்து வைக்க வேண்டும்.
  • உதாரணத்திற்கு ராமன் என்று வைத்து கொண்டால் முடியும் சொல் மண் என்று வருகின்றது. அதனால் அதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.
  • மூன்றாவதாக ஓரே பெயர் தான் குழந்தைக்கு வைக்க வேண்டும்.
  • ஆக ஒரு பெயரை தேர்ந்து எடுக்கும் போது மூன்று விஷயங்களை பார்த்து தேர்ந்து எடுங்கள். எல்லாம் நன்மைகளாக நடைபெறும்.

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா.. கவலை வேண்டாம் -இத செஞ்சு பாருங்க

புதுமையான தமிழ் பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement