7 மாத குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவு முறைகள்..!

Advertisement

7 மாத குழந்தை எடை அதிகரிக்க | How to Increase 7 Month Baby Weight

ஒரு குழந்தை பிறப்பது என்பது மிகவும் சவாலான ஒரு செயல் ஆகும். ஏனென்றால் ஒரு குழந்தை கருவில் உருவாகியதில் இருந்து அதற்கு எது நன்மை தரக்கூடியதாக இருக்கிறதோ அதனை மட்டும் தான் தாய்மார்கள் கொடுத்துவருகின்றனர். இவற்றை எல்லாம் கடந்து 10 மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்பு அதன் ஆரோக்கியம் சிறப்பாகவும் மற்றும் உடல் எடை அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் தாய்மார்கள் நினைப்பார்கள். அப்படி நீங்கள் நினைக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியலாம் இருக்கும். அதனால் இன்று 7 மாத குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

குறிப்பு: குழந்தைகளுக்கு எந்த உணவு அல்லது மருந்துகள் கொடுக்க வேண்டும் என்றாலும் அதனை மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே கொடுக்க வேண்டும்.

How to Increase 7 Month Baby Weight

ஆப்பிள்:

 7 மாத குழந்தை எடை அதிகரிக்க

ஒரு குழந்தை பிறந்த 5 மாதத்திற்கு பிறகு அந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க கொஞ்சம் கொஞ்சமாக உணவு வகைகளான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

 அதனால் வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கலோரிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய சத்துக்கள் நிறைந்த ஆப்பிளை நன்றாக பிசைந்து அதில் இருக்கும் கொட்டையினை அகற்றிவிட்டு குழந்தைக்கு சரியான அளவில் கொடுப்பதன் மூலம் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க கூடும்.  
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும்..!

முட்டை:

weight gain food for 7 month baby in tamil

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் D, வைட்டமின் B6, வைட்டமின் B12, கலோரிகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை இருக்கிறது. இத்தனை சத்துக்கள் உள்ள முட்டையின் மஞ்சள் கருவினை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் உடல் எடை மற்றும் ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக இருக்கும். அதனால் அளவுக்கு அதிகாமாக மஞ்சள் கருவினை குழந்தைக்கு கொடுக்காமல் சரியான அளவில் கொடுப்பது நல்லது.

புரதச்சத்து உணவு:

குழந்தையின் எடை அதிகரிக்க

7 மாத குழந்தைக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவினை அளிப்பதன் மூலம் உடல் எடை மிக வேகமாக அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் மூளையின் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்யும்.

ஆகையால் கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றையுடன் துவரம் பருப்பினை வேக வைத்து நன்றாக மசித்து குழந்தைக்கு சாப்பாடாக கொடுப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

மேலே சொல்லப்பட்டுள்ள உணவு முறைகள் பற்றி மருத்துவரிடமும் ஒரு முறை ஆலோசனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படியுங்கள்⇒ 3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement