How to Increase Baby Hemoglobin Naturally in Tamil
பொதுவாக என்னுடைய குழந்தை நன்றாக தான் சாப்பிடுகிறது, ஆனால் என்னுடைய குழந்தையின் ஹீமோகுளோபின் அளவு குறைவாகவே உள்ளது என்று கவலைபடும் பெற்றோரா நீங்கள் உங்களுக்காக தான் இந்த பதிவு. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சிறந்த 5 உணவுகள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். முதலில் குழந்தைகளுக்கு பிடிக்கிறதே என்று ஆரோக்கியமற்ற உணவுகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்த்து நல்ல சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு அளிப்பதன் மூலமே அவர்களின் ஹீமோகுளோபின் குறைபாட்டை போக்கி விடலாம். சரி வாங்க நண்பர்களே குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சிறந்த 5 உணவுகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளுக்கு பசியை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்கள்
How to Increase Baby Hemoglobin in Tamil:
குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவை உதவும் 5 உணவுகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. தானிய வகைகள்:
பொதுவாக தானிய வகைகளில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதனால் இதனை குழந்தைகளின் உணவில் தொடர்ந்து சேர்த்து வருவதால் விரைவில் அவர்களின் ஹீமோகுளோபின் குறைபாட்டை போக்கி, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து விடலாம்.
2. கீரை வகைகள்:
முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் கீரை போன்ற அடர் பச்சை இலை கொண்ட காய்கறிகளில் குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக அரை கப் வேகவைத்த கீரையில் தோராயமாக 3 மி.கி இரும்புச்சத்து உள்ளது.
அதனால் குழந்தைகளின் உணவில் தொடர்ந்து கீரை வகைகளில் சேர்த்து வருவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவி புரியும்.
3. உலர்ந்த பழங்கள்:
பொதுவாக உலர்ந்த பழங்களில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இவற்றை குழந்தைகளின் உணவில் தொடர்ந்து சேர்த்து வருவதால் விரைவில் அவர்களின் இரத்தசோகை குறைபாட்டை போக்கி, இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவி புரியும்.
மேலும் இவற்றை தினமும் குழந்தைகளுக்கு அளிப்பதின் மூலம் அவர்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் உதவுகின்றது.
இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
4. முட்டை:
குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிக அளவில் முட்டையில் உள்ளது. அதிலும் குறிப்பாக அரை கப் வேகவைத்த முட்டையில் தோராயமாக 1 மி.கி இரும்புச்சத்து உள்ளது.
எனவே தினமும் ஒரு முட்டை என்ற விகிதத்தில் குழந்தைகளின் உணவில் தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிகமாக பயன்படுகிறது.
5. பீட்ரூட்:
பொதுவாக பீட்ரூட்டில் அதிக அளவு கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் என்பதால் இதனை குழந்தைகளின் உணவில் தொடர்ந்து சேர்த்து வருவதால் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |