குழந்தை உயரமாக வளர உணவு வகைகள்..! How to increase height for kids..!

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள்

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள்..! How to increase height for kids..!

பொதுவாக பெற்றோர்களின் கனவு தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும், வயதிற்குஏற்ற உயரமும், எடையும் இருக்க வேண்டும் என்ற ஆசைதான்.

இருப்பினும் ஒரு குழந்தையின் வளர்ச்சியும் உயரமும் சரியாக இருக்க சத்தான உணவு, சில நல்ல பழக்கங்கள், உடல் பயிற்சிகளும் அவசியம்.

குழந்தைகளின் உடலில் சீரான வளர்ச்சி இல்லையென்றால் அது அவர்களின் எதிர் காலத்தையே பாதித்து விடும். எனவே, குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து விட்டு வழங்குவது நல்லது.

மேலும், கடைகளில் விற்கும் கண்ட உணவுகளை குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்கவும்.

சரி இந்த பதிவில் குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – முட்டை:

புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும். இவை உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவும்.

கூடவே செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்க உதவும். பொரித்த முட்டையை காட்டிலும் வேக வைத்த முட்டை தான் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும்.

எனவே குழந்தை உயரமாக வளர முட்டையை உணவில் அதிகளவு சேர்க்கலாம்.

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – முழு தானியங்கள்:- 

பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசம் சீராக வேலை செய்யும்.

மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும். அன்றாட உணவில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – பால்:milk

குழந்தைகளின் வளர்ச்சி பாலில் அதிகமாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால் சிறந்த உணவாகும். அத்துடன் இது உடல் வளர்ச்சிக்கும் நன்கு உதவும்.

கால்சியம், வைட்டமின் டி, புரதசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும்.

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – சிக்கன்:

பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு சிறப்பாக உதவும்.

காரணம் இவற்றில் உள்ள அதிக படியான புரதம் தான். வாரத்திற்கு 1 முறையாவது இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி? இதோ சில டிப்ஸ்..!

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – சோயா பீன்ஸ்:

ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம்.

இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு சிறப்பாக உதவும். அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – காய்கறிகள்:

குழந்தைகளின் உணவில் இரும்புசத்து சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, ஏ, கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது.

முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

குழந்தை உயரமாக வளர உணவு வகைகள் / How to increase height for kids – பழங்கள்:

பொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே உடலின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை குறைக்கும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil