Drinks to Boost Immune System for Child
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சனை வருவது வழக்கமாகி விட்டது. குறிப்பாக சிறுவயது குழந்தைகளுக்கு அதிகம் காணப்படுகிறது. அதற்கு காரணம் சரியாக உணவை சாப்பிடாமல் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதற்கு சத்தான உணவை கொடுத்தாலும் சரியாக சாப்பிடாமல் மறுத்து விடுகிறார்கள். அதை நினைத்து கவலைப்பட அவசியம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
மஞ்சள் பால் :
மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கிறது. இதில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உள்ளதால் சளி, இருமல், தொண்டையில் ஏற்படும் பிரச்சனைக்கு மஞ்சள் பால் நல்ல பானமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..! Immunity boosting foods..!
பச்சை நிற ஸ்மூத்தி :
பச்சை நிற ஸ்மூத்தி என்பது காய்கறிகளில் செய்வது ஆகும். இதில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. பல வகையான நோய் தொற்றுகளை அகற்றுவதற்கு பச்சை நிற ஸ்மூத்தி பெரிதும் உதவுகிறது. ஸ்மூத்தியில் உள்ள பொருள்களான கீரை, வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சை, இஞ்சி மற்றும் உப்பு போன்ற பொருள்களை வைத்து வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த ஸ்மூத்தியை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு பசியை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்கள்..!
சிட்ரஸ் பழங்கள் ஜூஸ் :
சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் பல வகையான நோய்கள் வருவதை தடுக்க உதவுகிறது. குறிப்பாக சிவப்பு திராட்சை மற்றும் ஆரஞ்ச் பழம் போன்ற பழங்களை ஜூஸாக குடித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அதிகரிக்க உதவுகிறது.
குங்குமப்பூ பால்:
குங்குமப்பூ பாலை குழந்தைகள் மட்டுமில்லாமல் எல்லோரும் குடித்து வரலாம். அதில் பல வகையான சத்துக்களை கொண்டது. இந்த குங்குமப்பூ பாலை குளிர்காலத்தில் சூடாக குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. குழந்தைகள் குடிப்பதால் நோய்கள் வருவதை தடுக்கிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குங்குமப்பூ பால் உதவுகிறது.
தக்காளி ஜூஸ் :
அன்றாடம் வாழ்கையில் எளிதில் கிடைக்க கூடியது தக்காளி ஆகும். அதை பயன்படுத்தி நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தடுப்பது மட்டுமில்லாமல் அதனை தக்காளி ஜூஸ் செய்து குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் தேநீர் :
மஞ்சள் தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சளை நோய்களுக்கு அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது வளர்சிதை மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இந்த மஞ்சள் தேநீரை காலையில் குடிப்பதனால் கொஞ்சம் கொஞ்சமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |