குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

Advertisement

குழந்தைக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது செய்ய வேண்டிய முதல் உதவி..!

குழந்தைகள் பொதுவாக விளையாடும் போது சிறு சிறு அடிகளோ அல்லது தீக்காயங்களோ ஏற்படுவது இயற்கை தான். இருப்பினும் உடனே மருத்துவரை, காண இயலாத போது. அப்போ நாம் செய்ய வேண்டிய முதல் உதவி (baby first aid) பற்றித்தான் இப்போது நாம் காணப்போகிறோம்.

சரி வாங்க குழந்தைகளுக்கு எதிர்பாராமல் நிகழும் பிரச்சனையின் போது, நாம் செய்ய வேண்டிய முதல் உதவி (baby first aid) என்ன என்று காண்போம்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்..!

குழந்தைக்கு தீக்காயங்கள் ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் உதவி:

குழந்தைகளுக்கு எதிர்பாராமல் திடீர் என்று ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படும் போது, உடனே மாவு, உப்பு, இங்கு அல்லது பேஸ்ட் போன்றவற்றை தீக்காயங்களின் மீது வைக்க கூடாது. இவ்வாறு செய்வதினால் எரிச்சலையும், காயங்களையும் அதிகரித்து விடும்.

எனவே குழந்தைக்கு தீக்காயங்கள் ஏற்படும்போது உடனே தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் எரிச்சல் தணியும்.

அதன் பிறகு (silver nitrate gel 0.2%) என்ற ஆயில்மண்டை தீக்காயத்தின் மீது தடவி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு, எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாது. இது தான் குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்படும்போது செய்யவேண்டிய முதல் உதவியாகும்.

இவற்றை செய்து விட்டு குழந்தை நல மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்லவும்.

சுளுக்கு விழும்போது:

குழந்தைகள் சாதாரணமாக விளையாடும்போது, எதிர்பாராத விதமாக குழந்தைக்கு சுளுக்கு விழுந்து விட்டால், உடனே சுளுக்கு வலிக்க கூடாது. இது தவறான அணுகு முறையாகும். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் நரம்பு பாதிக்கப்படும்.

எனவே குழந்தைக்கு சுளுக்கு விழுந்து விட்டால் அப்போது, குழந்தைக்கு சுளுக்கு வலிக்காமல் சிறிது நேரம் ஒய்வு எடுக்க விட வேண்டும்.

குழந்தைக்கு உள்காயமாக இருந்தால் அப்போது ஐஸ்கட்டியை வைத்து ஒற்றிடம் கொடுப்பது மிகவும் நல்லது.

அதே போல் உள்காயத்தில் இரத்த கசிவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு சிறிது நேரம் அந்த சுளுக்கு விழுந்த பகுதியை அழுத்தி பிடிக்க வேண்டும்  அல்லது அதற்கான பேண்டேஜை வாங்கி ஓட்டிவிடலாம்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள வீக்கம் குறையும்.

மேல்கூறப்பட்டுள்ள முதல் உதவிகள் செய்தும் குழந்தைக்கு சுளுக்கு சரியாகவில்லை என்றால் மருத்துவரை நாடுவது மிகவும் நல்லது.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement