குழந்தைக்கு நன்கு பசி எடுக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் ஹெல்தி டிரிங்ஸ்..!

Advertisement

குழந்தைகளுக்கு நன்றாக பசிக்க வேண்டுமா அப்போ இந்த ஹெல்தி டிரிங்ஸ் (Healthy Drinks) கொடுங்க..!

வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப் பெண்கள் வரை அனைவரும் கவலைப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் என் குழந்தை சரியாக சாப்பிடமாட்டேன்கிறான். இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று தினமும் புலம்புகின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்ய சூப்பர் ஹெல்தி டிரிங்ஸ் (healthy drinks) உள்ளது.

இந்த டிரிங்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம். இந்த டிரிங்கை ஒரு வயது குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறையாவது கொடுத்து வரலாம். இந்த ஹெல்தி டிரிங்கை குழந்தைகளுக்கு கொடுப்பதினால், குழந்தைகளுக்கு அதிகளவு பசி எடுக்கும். மேலும் குழந்தையின் உடல் எடையையும் அதிகரிக்கவும் முடியும்.

சரி வாங்க இந்த சுவையான டிரிங்ஸ் (healthy drinks) எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..!

ஹெல்தி டிரிங்ஸ் (Healthy Drinks) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. பேரிச்சை பழம் – மூன்று
  2. பெரிய கற்கண்டு – இரண்டு
  3. தண்ணீர் – 1/2 கிளாஸ்
  4. வாழைப்பழம் – ஒன்று
  5. ஜாதிக்காய் – ஒரு சிட்டிகை
  6. உலர்திராட்சை – 7

ஹெல்தி டிரிங்ஸ் (Healthy Drinks) செய்முறை:

அரை டம்ளரில் தண்ணீர் எடுத்து கொள்ளவும், அவற்றில் இரண்டு கற்கண்டு, மூன்று பேரிச்சை பழம் மற்றும் 7 உலர்திராட்சை ஆகியவற்றை சேர்த்து ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் அல்லது காச்சிய பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி இப்படியே ஊட்டி விடலாம் அல்லது அவற்றில் சிறிதளவு பால் ஊற்றி டிரிங்காகவும் கொடுக்கலாம்.

ஹெல்தி டிரிங்ஸ் (Healthy Drinks) பயன்கள்:

வாழைப்பழம் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

பேரிச்சைப்பழம் மற்றும் உலர்திராட்சை குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்ல போஷாக்கை வழங்குகின்றது.

ஜாதிக்காய் தூள் குழந்தைகளுக்கு நல்ல ஜீரண சக்தியை அதிகரிக்கும். இது இல்லாமல் குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் சரி செய்யும்.

பிறந்த குழந்தைகளுக்கு உரமருந்து கொடுப்பது எப்படி?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement