குழந்தையின் காதுக்குள் எறும்பு சென்றால் என்ன செய்ய வேண்டும்..!
எதிர்பாராத விதமாக சில சமயங்களில், காதுக்குள் பூச்சியோ அல்லது எறும்போ காதுக்குள் நுழைந்துவிட்டால் பொதுவாக அந்த சமயத்தில் கவலையும் பதற்றமும் ஏற்படும். இது போன்ற நிலைகள், குழந்தைகளுக்கு நேர்ந்தால் அந்த சமயம் பயமும், குழப்பமும் பெற்றோர்களுக்கு அதிகமாக இருக்கும்.
சரி குழந்தையின் காதுக்குள் பூச்சியோ (how to remove insect from ear) அல்லது எறும்போ நுழைந்தால் என்ன செய்ய வேண்டும்? இதற்கான வீட்டு வைத்தியம் என்ன என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!
இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..! |
குழந்தையின் காதுக்குள் எறும்பு சென்றால் எப்படி வெளியேற்றுவது – வீட்டு வைத்தியம்:-
காதுக்குள் வண்டு சென்று (how to remove insect from ear) விட்டால், குழந்தைகள் உடனே அழத் தொடங்கிவிடுவார்கள். இந்த சமயத்தில் குழந்தைகளை பொறுமையாக சமாதானம் செய்ய வேண்டும்.
பிறகு எந்த காதில் வண்டோ அல்லது எறும்போ நுழைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டு அந்தப் பக்க தலையைச் சாய்த்து உலுக்க சொல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் பூச்சி வெளியே வர வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை காதுக்குள் பூச்சி உயிரோடு ஊருக்கும் பட்சத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை காதுக்குள் ஊற்றவும். இவ்வாறு செய்வதினால் காதுக்குள் இருக்கும் பூச்சி இறந்துவிடும்.
அதேபோல் காதுக்குள் சென்ற பூச்சி ஒரு வேளை இறந்துவிட்டால் மிதமான சூடு உள்ள தண்ணீரை காதுக்குள் சிறிதளவு ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதினால் காதுக்குள் இருக்கும் எறும்பு வெளியேறிவிடும்.
இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டிலேயே குழந்தையின் காதுக்குள் (how to remove insect from ear) நுழைந்த பூச்சியை வெளியேற்றிவிடலாம். இந்த முறையை பின்பற்ற தயங்குபவர்கள், உடனே மருத்துவரிடம் குழந்தையை அழைத்து சென்று இதற்கான சிகிச்சை முறையினை பின்பற்றுவது மிகவும் நல்லது.
7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..! |
குழந்தையின் காதுக்குள் பூச்சி புகுந்தால் என்ன செய்யக்கூடாது:
- மெல்லிய கம்பிகளைக் காதினுள் நுழைக்கவே கூடாது.
- காது குடையும் இயர் பட்ஸ்களைப் பயன்படுத்தவே கூடாது.
- தலை மற்றும் காது பகுதிகளைத் தாக்குவதோ, அடிப்பதோ கூடவே கூடாது.
- இது எல்லாம் செய்யும் பொழுது பூச்சி செவி அறையைத் தாண்டி சென்று விடும். இதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படும்.
- உச்சக்கட்டமாகச் செவித்திறன் கெட்டுவிடும் அபாயம் கூட உள்ளது.
எந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே பூச்சி எடுக்கும் முயற்சியை மேற்கொள்ள கூடாது?
- காதுகளில் இதற்கு முன் அதிகளவு தொற்று தாக்கியுள்ள குழந்தைகள்.
- செவித் திறன் பாதிப்புள்ள குழந்தைகள்.
- பிறவியிலேயே டிம்பனோஸ்டோமி டியூப்ஸ்,செவி அறை போன்ற காது பகுதிகளில் பாதிப்பு உள்ள குழந்தைகள்.
- இது மாதிரியான குழந்தைகளுக்கு வீட்டிலேயே பூச்சி எடுக்கும் முயற்சியை (வீட்டு வைத்தியம்) மேற்கொள்ளக் கூடாது. இவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது உகந்தது.
- அதேபோல் சரியான அளவுக்கு பயிற்சியோ அல்லது செயல்திறனோ இல்லாத நபர்களை நம்பி உங்கள் குழந்தையின் காதுகளின் புகுந்த பூச்சியை எடுக்க அனுமதி தரவே வேண்டாம்.
குழந்தையின் காதுக்குள் பூச்சி புகுந்தால் எப்போது மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்..!
குழந்தையின் காதுக்குள் அதிக நேரம் பூச்சி இருக்க நேயர்ந்தால் குழந்தைக்கு வலியும், வீக்கமும் அதிகரிக்கும். அந்த சமயங்களில் வீட்டில் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத போது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வீட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் உங்களால் பூச்சியின் ஒரு பக்கத்தை மட்டுமே வெளியே எடுக்க முடிந்திருந்தால், மற்றதை அகற்ற மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தையின் காதில் துர்நாற்றம் வீசினாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தையின் காதுக்குள் பூச்சி புகுந்தால் மருத்துவர்களின் சிகிச்சை என்ன?
இந்த பிரச்னையை பொறுத்தவரை காது மருத்துவர்கள் அவர்களிடமுள்ள ஓடோஸ்கோப் (otoscope) என்னும் கருவியை பயன்படுத்தி காதுகளை சோதித்து பார்ப்பார்கள்.
மருத்துவர் தன் சோதனை முடிவில் பூச்சி உயிருடன் இருக்கிறது என்பதை கண்டறிந்தால், மினரல் அல்லது ஆலிவ் எண்ணெய்யைக் குழந்தையின் காதில் பீய்ச்சி அடிப்பார். இவ்வாறு செய்வதால் பூச்சி இறந்துவிடும்.
பிறகு நல்ல தண்ணீரைக் காதில் பாய்ச்சி பூச்சியை வெளியே எடுத்து விடுவார்.
ஒரு சமயம் தண்ணீரினூடே பூச்சி வெளியே வராமல் போகும். அப்போது இடுக்கி (forceps) போன்ற கருவியைப் பயன்படுத்தி பூச்சியை வெளியே எடுக்க முயல்வார்.
சில குழந்தைகள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அந்த மாதிரி நேரத்தில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் அமைதி அடையும் சூழலில் மருத்துவர் பூச்சியை அகற்றி விடுகின்றார்.
பெரும்பாலும் மயக்க மருந்து கொடுக்கும் தேவை ஏற்படாது.
காதுகளில் இருக்கும் பூச்சியை அகற்ற இடுக்கி,கொக்கி மாதிரியான கருவி, உறியும் கருவி(suction), இயர் ஸ்ரன்ஞ்ச் முதலிய பொருட்களைக் கொண்டு மருத்துவர் எளிதாக எடுத்து விடுவார். மயக்க மருந்து அனேகமாக அவசியப்படாது.
பூச்சியை அகற்றியவுடன் காதில் வலி மற்றும் சில அறிகுறிகள் தென்படலாம்.
இதனால் ஏற்பட்ட தொற்று மற்றும் வீக்கம் குறைய சில நாட்கள் தேவைப்படும்.
இந்த பிரச்சினையில் இருந்து பூரணமாகக் குணமடைய மருத்துவர் கூறும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |