குழந்தைகளுக்கு தொடர்ந்து சளி, இருமல் இருக்குதா..! அப்போ பனங்கற்கண்டை இப்படி செய்து கொடுங்க..!

Advertisement

 Baby Cough And Cold Remedies in Tamil

பொதுவாக குளிர்காலம் வந்தால் தான் அனைவருக்கும் சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால் இப்போது எல்லா காலத்திலும் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வருகிறது. பருவநிலை மாறி மாறி வருவதால் உடலானது அதனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் குழந்தைகளுக்கு இப்பிரச்சனை எளிதில் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சனையை போக்க குழந்தைகளுக்கு மாத்திரைகளை கொடுத்து வருவோம். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலே அதிக மாத்திரைகளை கொடுக்க கூடாது.  இயற்கையாக உள்ள மருந்துகளை கொடுப்பது தான் நல்லது. ஆகவே, குழந்தைகளுக்கு சளி இருமல் அதிகமாக இருந்தாலோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ பங்கற்கண்டு கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பனங்கற்கண்டை எப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..!

What To Give Child With Cough And Cold in Tamil:

 what to give child with cough and cold in tamil

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு இதில் 1 துண்டு சுக்கு மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

 children's cough and cold remedies in tamil

தண்ணீர் கொதித்து பாதியான அளவில் குறையும் போது அதனை இறக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனை வெதுவெதுப்பாக அல்லது குடிக்கும் பதத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 குழந்தைகளுக்கு சளி இருமல் நீங்க

சளி அதிகமாக இருந்தால் பகலில் இரண்டு முறை கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

எண்ணெய் மற்றும் காரமான உணவுகள்:

குளிர்காலத்தில் சிறுவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள்:

குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் நேரத்தில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களை உட்கொள்வது கடினமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் காலத்தில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு அசைவ உணவு எப்போது கொடுக்க வேண்டும்..

இனிப்பு பொருட்கள்:

குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் நேரத்தில் இனிப்பு தின்பண்டங்கள் அல்லது இனிப்பு நிறைந்த உணவுகளை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement