தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?

Advertisement

How to Stop Breastfeeding in Tamil

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை எந்த வயது வரை கொடுக்கலாம், எந்த வயதில் நிறுத்த வேண்டும் என்ற நிறைய சந்தேகம் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் வீட்டில் இருப்பவர்களும், அவர்களை சுற்றி இருப்பவர்களும் தாய்ப்பால் கொடுப்பது குறித்து நிறைய விதமாக சொல்வார்கள், இது போக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றால் மருத்துவரும் ஓன்று சொல்வார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சொல்வதினால் இவற்றில் யார் சொல்வதை நாம் கேட்பது என்பதில் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு நிறைய குழப்பங்கள் வரும்.

தாய்ப்பாலை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த தாய்ப்பாலை நீங்கள் எப்பொழுது நிறுத்த வேண்டும்? இதனால் தாய்ப்பாலூட்டும் தாய்க்கு என்ன பிரச்சனை வரும், தாய்ப்பால் குடிக்கும் அந்த குழந்தைக்கு என்ன பிரச்சனை வரும் என்பது குறைத்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?

How to Stop Breastfeeding

தாய்ப்பாலினை எப்போது வரை கொடுக்கலாம் என்றால், இவற்றில் இரண்டு வகை இருக்கிறது. அவை

  • Baby Led/ Child Led Weaning
  • Mother Led Weaning

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 மாத குழந்தை உணவு அட்டவணை

Baby Led/ Child Led Weaning என்றால் என்ன?

Baby Led/ Child Led Weaning என்பது குழந்தைகளை அவர்களுடைய விருப்பத்தின் படி தாய்ப்பால் குடிக்க விடவேண்டியது. அவர்கள் எவ்வளவு நாட்கள் தாய்ப்பால் குடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதுவரை தாய்ப்பாலை குடிக்கட்டும். அவர்கள் ஒரு நிலைக்கு மேல் தாய்ப்பால் குடிப்பதில் இன்ட்ரெஸ்ட் குறைய ஆரம்பிக்கும், அப்பொழுது அவர்களாகவே தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக நிறுத்திக்கொள்வார்கள். ஆக அது வரை தாய்ப்பால் கொடுத்துவரலாம் இது தான் Baby Led/ Child Led Weaning ஆகும். இந்த நிலையானது குறிப்பாக 2 முதல் 3 வயது வரை இருக்கும், அதன் பிறகு இந்த நிலை இருக்காது.

மூன்று வயதிற்கு மேல் அந்த குழந்தைக்கு மற்ற விஷயங்களில் தான் நாட்டம் அதிகமாக இருக்கும். ஆக தாய்ப்பால் குடிப்பதில் அதிக நாட்டம் இருக்காது. ஆக இதனை தான் பெரும்பாலானவர்கள் பரிந்துரைப்பார்கள்.

எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு அதிகபட்சம் 2 அல்லது 3 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம் அதன் பிறகு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த ஆரம்பிக்கலாம். அதற்காக இரண்டு வயது வரை தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை தினமும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக solid food அதாவது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்க ஆரம்பித்துவிட வேண்டாம்.

ஏன் என்றால் ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜ்க்கு பிறகு அதாவது குழந்தையின் 1 வயதுக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் இருந்து கிடைக்காது, திட உணவுகளில் இருந்து தான் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், ஆக திட உணவுகளை கொடுத்துக்கொண்டே அவ்வப்போது தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்ல முறை ஆகும். இதன் மூலம் குழந்தையின் உள்ளுறுப்புகள் வளர்ச்சியடைய மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக குழந்தையின் மூளை திறன் நன்கு வளர்ச்சியடையும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி

Mother Led Weaning என்றால் என்ன?

ஒரு சில காரணங்களினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படலாம் அது என்னென்ன என்று இப்பொழுது பார்ப்போம். குறிப்பாக இது எல்லா தாய்மார்களுக்கு தெரிந்திருக்கும் அதாவது குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று.

6 மாதம் முதல் 1 வயது வரை மற்ற உணவுகளை கொடுத்தாலும் கூட தாய்ப்பாலில் இருந்து தான் பெருமபலன சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கிறது.

1 வயதிற்கு மேல் குழந்தைக்கு கிடைக்கும் சத்தானது பெருமாளும் நாம் கொடுக்கும் திட உணவுகளில் இருந்து தான் கிடைக்கும். ஆக ஒரு வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தொடரவும், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளலாம். 

மேலும் அம்மாவின் உடல் நலம் தான், குழந்தையின் உடல் நலம் நன்றாக இருப்பதற்கு உதவுகிறது. ஆக தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது, சரியான தூக்கம் கிடைக்கவில்லை இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்றால் தாராளமாக குழந்தையின் ஒரு வயதிற்கு பிறகு நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ளலாம்.

இது தவிர உங்கள் குழந்தை 1 வயதிற்கு பிறகு தாய்ப்பால் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கிறாங்க, திட உணவுகளை சாப்பிடுவது இல்லை என்றால் கண்டிப்பாக குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் அதாவது இரும்பு சத்து மிகவும் குறைவாக இருக்கும் இதனால் இரத்த சோகை நோய் ஏற்படலாம், இது தவறி வைட்டமின் B12 சத்து கொஞ்சம் குறைவாக தான் கிடைக்கும். ஆக ஒரு வயதிற்கு பிறகு தாய்ப்பால் மட்டுமே அதிகமாக பருகும் குழந்தைக்கு இந்த வைட்டமின் பி12 குறைபாட்டினால் குழந்தையின் மூளைவளர்ச்சி பாதிக்கப்படலாம்.

எனவே ஒரு வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் திட உணவுகளையும் சேர்த்து கொடுத்து வருவது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். அல்லது தாய்ப்பாலை முழுமையாக நிறுத்திவிட்டு திட உணவுகளை கொடுக்க ஆரம்பிப்பது மிகவும் சிறந்த முடிவாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறைமாத குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement