குளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..!

Advertisement

குளிர்காலங்களில் குழந்தை தோல் பராமரிப்பு (baby winter care tips) டிப்ஸ்..!

குளிர்காலத்தில் குழந்தை தோல் பராமரிப்பு: இந்த குளிர்காலத்தில் குழந்தை பலவகையான நோய் தாக்குதல்கள் உண்டாகும். அந்த நோய் தாக்குதல்களினால் குழந்தைகள் பெரும் அவஸ்த்தைபடுவார்கள்.

குறிப்பாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் குழந்தை இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் என்று பலவையான பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், குழந்தைகளை குளிர்காலத்தில் சரியான பராமரிப்பு முறையை பின்பற்றாததே முதல் காரணமாகும்.

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு

 

சரி இப்போது நாம் இந்த பகுதில் குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் குழந்தைகளை (baby winter care tips) எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாருங்கள்..!

குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

மழைக்காலத்தில் குழந்தை தோல் பராமரிப்பு – டிப்ஸ் 1:

குளிர்காலத்தில் குழந்தை (baby winter care tips) தினமும் குளிப்பாட்டிவிடும் பழக்கத்தை தவிர்த்து கொள்ளுங்கள். அதற்குப்பதில் வெந்நீர் தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து, குழந்தையின் உடலை துடைத்துவிடுங்கள்.

தவழும் குழந்தையாக இருந்தால், ஒருநாள் விட்டு ஒருநாள் குளிப்பாட்டி விடுங்கள். இவ்வாறு செய்வதினால் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு (baby winter care tips) தோல் பிரச்சனைகள் (baby skin care in winter) ஏற்படாமல் இருக்கும்.

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு – டிப்ஸ் 2:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: சில தாய்மார்களுக்கு குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு (baby winter care tips) ஆயில் மசாஜ் செய்யலாம் என்ற சந்தேகம் இருக்கும்.

கட்டாயம் குழந்தைகளை குளிக்கவைப்பதற்கு முன் ஆயில் மசாஜ் செய்யலாம். இருப்பினும் நாம் எப்போது பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடுகு எண்ணெய்:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குழந்தையின் உடல் சூட்டை சரியான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஆலிவ் ஆயில்:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: ஆலிவ் ஆயில் குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

பாதாம் எண்ணெய்:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: பாதாம் எண்ணெய் குழந்தையின் தோல் (baby skin care in winter) பகுதிகளுக்கு நல்ல போஷாக்கை வழங்குகிறது.

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு – டிப்ஸ் 3:

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப் கூட குளிர்காலத்திற்க்கென்று பல சோப் இருக்கின்றது, அவற்றில் தரமான சோப்பை கூட வாங்கி குழந்தைகளுக்கு குளியல் சோப்பாக பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாக (baby skin care in winter) பாதுகாக்க முடியும்.

குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா?

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு – டிப்ஸ் 4:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குளிர்காலத்தில் குழந்தை (baby winter care tips) பாதுகாக்கும் முறையில், குழந்தைகளுக்கு கட்டாயம் அனைத்து தாய்மார்களும் சொட்டர் போட்டுவிடுவார்கள்.

அந்த வகையில் குழந்தைகளுக்கு தற்போது அறிமுகம் உள்ள baby romper வாங்கி அணிந்துவிடலாம். இந்த baby romper குழந்தைகளுக்கு நல்ல கதகதப்பாக இருக்கும். இவற்றிலும் காட்டன் துணியாக இருக்கும் baby romper பயன்படுத்துங்கள். குழந்தைகளுக்கு எந்த ஒரு எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தாது.

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு – டிப்ஸ் 5:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குளிர்காலத்தில் கட்டாயமாக வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இவ்வாறு செய்வதினால், பனி சாரல்கள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்கும். மாலை நேரங்களில் ஜன்னல் கதவுகளை சாத்தி வைக்கவும். அதேபோல் காலை நேரங்களில் நல்ல சூரிய வெளிச்சம் வந்த பிறகு ஜன்னல் கதவுகளை திறந்து வையுங்கள்.

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு – டிப்ஸ் 6:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு (baby winter care tips) கொடுக்க வேண்டிய உணவு முறைகள். பிறந்த குழந்தைகளுக்கு, ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலே சிறந்த உணவு.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு பிறகு குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தருவதும் மிகவும் சிறந்தது.

குறிப்பாக குழந்தைகளின் உணவுகளில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்து உணவுகளை கொடுக்கலாம்.

எலுமிச்சை குழந்தைகளுக்கு வைட்டமின் சி சத்தை அதிகரிக்க உதவும். இதைத்தவிர குழந்தைகளுக்கு வைட்டமின் சி நிறைந்துள்ள பழங்களான ஆரஞ்சு பழங்களை கொடுக்கலாம்.

டிப்ஸ் 7:

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குளிர்காலமாக இருந்தாலும் சரி அல்லது மழைக்காலமாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சில ஆரோக்கிய பிரச்சனையை நம் கைவைத்தியத்தை பயன்படுத்தி சரி செய்துவிட முடியும். சில ஆரோக்கிய பிரச்சனைகளை மருத்துவரால் மட்டுமே சரி செய்ய முடியும்.

எனவே குழந்தையின் உடல் ஆரோக்கிய பிரச்சனையை அறிந்து சரியான மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் நல்லது.

 

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement