மெமரி பவரை அதிகரிக்க குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!

Advertisement

மெமரி பவரை அதிகரிக்க குழந்தை வளர்ப்பு டிப்ஸ் (Baby care tips in tamil)..!

உங்கள் குழந்தை இரவு பகல் என கண்விழித்து படித்தாலும் அடுத்த அரை மணி நேரத்திற்குள் படித்ததெல்லாம் மறந்துவிடுகிறார்களா..? இதனால் உங்கள் குழந்தை சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகளுக்குள்ளும் சிக்கி கொள்கின்றார்களா..? உங்கள் குழந்தைக்கு மெமரி பவரை அதிகரிக்க வேண்டுமா அப்படி என்றால் இவற்றில் இருக்கும் சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ் மிகவும் உதவுகிறது.

இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!

 

சரி வாங்க குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன குழந்தை வளர்ப்பு டிப்ஸ் (baby care tips in tamil) உள்ளது என்று காண்போம்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 1:

ஐம்புலன்களாலும் நாம் உள்வாங்கும் விஷயங்கள் வெவ்வேறு கட்டங்களைத் தாண்டி மெமரியில் பதிவு செய்யப்படுகிறது. மெமரியில் பதிவு செய்யப்பட்ட விஷயத்தை தேவைப்படும் இடத்தில் திரும்ப எடுப்பதைத்தான் நினைவாற்றல் என்கிறோம்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் (Baby care tips in tamil)2:

நினைவுகளை பதிவு செய்வதில் பலவிதமான யுத்திகள் ஒவ்வொருவருக்குள் நிகழ்கிறது. படங்களாக, கதைகளாக, சம்பவங்களாக யோசிக்கவே முடியாத கற்பனையாக இப்படி தான் உள்வாங்கும் விஷயத்தை ஒரு குழந்தை தனக்கு சுலபமான வழியில் மெமரிக்கு கொண்டு செல்கிறது. எனவே நினைவுத் திறனில் பிரச்சனை என்றால், முதலில் அவர்கள் அந்த விஷயத்தை கவனிப்பதில் தான் பிரச்சனை இருக்கும்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 3:

கவனச் சிதறலுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வது முதல்படி. அதன் பின்னர் உள்வாங்கும் விஷயம் மெமரிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அது எந்த மெமரியில் ஸ்டோர் ஆகிறது என்பது அடுத்த கட்டம். முழுமையாக கவனிக்காமல் மெமரிக்கே கொண்டு செல்லாத விஷயங்கள் காணாமல் போய்விடும்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் (Baby care tips in tamil) 4:

கவனிக்கப்பட்டு ஷார்ட் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லும் விஷயங்கள், லாங்டேர்ம் மெமரிக்கு சரியாக வகை பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அவ்வாறு லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லப்படாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். எங்கோ கேட்டது மாதிரி இருக்கும். ஆனால் அந்த விஷயத்தை முழுமையாக நினைவுக்கு கொண்டு வரமுடியாது. அப்போது தான் பிரச்சனை விஸ்பரூபம் எடுக்கும்.

7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..!

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 5:

கவனிக்கும்போதும், விஷயங்களை உள்வாங்கும் போதும் நன்றாக புரிந்துகொள்ளும் சில குழந்தைகளுக்கு அந்த விஷயத்தை உடனே கேட்டால் சொல்லி விடுவார்கள். அடுத்த நாள் கேட்கும்போது அந்த விஷயத்தை மறந்து விடுவார்கள், இவர்களுக்கு விஷயங்களை லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்ல திரும்பத்திரும்ப அதை படிக்க வேண்டியுள்ளது.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் (Baby care tips in tamil) 6:

அதை அர்த்தமுள்ள புரிதலுக்கு உட்படுத்தி கதை,படங்கள், உருவங்கள் என லிங்க் செய்து லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லும்போது நினைவாற்றலை மேம்படுத்த முடியும். கண்களுக்கு விழிகளை சுழற்றும் பயிற்சி கொடுக்கும்போது மாணவர்களின் கவனம் ஒரு நிலைப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

மூச்சுப் பயிற்சியும் கவனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும். எந்த ஒரு விஷயத்தையும் கவனச்சிதறல் இன்றி உள்வாங்கினால் எக்காலமும் அது நினைவில் இருந்து அகலாது…

குழந்தையின் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்:

1. நினைவாற்றலில் சேமித்த விஷயங்களை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள, உணவால் கிடைக்கும் சத்துக்கள் மூளைக்கு உதவுகின்றன. முழு தானியங்களை சுண்டல் வகைகளாக அப்படியே சாப்பிடவேண்டும்.

2. சிவப்பு பரங்கிக்காயில் உள்ள விதையில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஜின்க் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

3. நல்ல கொழுப்பு உள்ள உணவுகளும், வைட்டமின் சி உள்ள ஆரஞ்ச், எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

4. கூடவே பச்சைக் கீரைகள், தக்காளியை சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாகும்.

5. நினைவாற்றல் மேம்பட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவை தவிர்க்கவே கூடாது.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement