ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!

குழந்தை பெயர்

குழந்தை பெயர் வைப்பது எப்படி?

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயரானது தான் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும்.

பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான்.

சரி பிறந்த குழந்தை பெயர் முதல் எழுத்து எது, குழந்தையின் நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை போன்றவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்தல் (Naming ceremony) என்னும் வழக்கம் பல சமூகங்களில் இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள சிலர் தங்கள் குல தெய்வப் பெயரை முதலில் குழந்தைக்கு வைக்கின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளில் ஆண் குழந்தையாக இருந்தால் தங்கள் தந்தை பெயர், பெண் குழந்தையாக இருந்தால் தங்கள் தாயின் பெயர் போன்று தங்கள் மூதாதையினரின் பெயரை வைக்கின்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்து கொண்ட பெயர்களையும் சூட்டுவது வழக்கம்.

சில குடும்பத்தில் தமிழ் பற்றுதலின் காரணமாக தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது. சிலர் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தாங்கள் விரும்பும் திரைப்படத் துறையினர் பெயர்களை வைக்கின்றனர். சிலர் தற்போது நாகரீகமாகப் பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியுள்ளது. இதனால், தற்போது எந்தப் பெயரிலும் இல்லாமல் புதியதாக பெயர்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தப் பெயர் வைக்கும் நிகழ்வு சமயம், சாதி, இடம் மற்றும் விருப்பம் போன்ற சில பிரிவுகளின் கீழ் வேறுபடுகிறது.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

 

சரி இந்த பகுதியில் ஆண் குழந்தை பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள், புராணப் பெயர்கள், புதுமையான தமிழ் பெயர்கள், வடமொழி தமிழ் பெயர்கள் தெரிந்து கொண்டு, தங்கள் குழந்தையின் வாழ்க்கையை அழகாக மாற்ற, குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

ஆண், பெண் குழந்தை பெயர் பட்டியல் 2019..!

குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி ?
NO  ஆண் குழந்தை பெயர்  பெண் குழந்தை பெயர் 
1 அகரமுதல்வன் அகரயாழினி
2 அக்கராயன் அமிழ்தவல்லி
3 அகவழகன் அமுதயாழினி
4 அகத்தியன் அரசி
5 அகமகிழன் அழகி
6 அகமுகிலன் அன்பரசி
7 அகிழவன் அன்புமலர்
8 அகில் இயல்பினி
9 அகிலன் இலக்கியா
10 அமுதன் இலயாழினி
11 அமிர்தன் இளமதி
12 அழகப்பன் இளவேனில்
13 அழகன் எழில்
14 அதிரன் ஏழிசைவாணி
15 அருள் கயல்
16 அருண் கயல்விழி
17 அருளழகன் கண்மணி
19 அருள்நம்பி கனிமொழி
20 அரும்பொறையன் கவின்மலர்
21 அறவணன் குந்தவை
22 அறவாணன் சுடரொளி
23 அறநெறியன் தங்கம்
24 அற்புதராசன் தமிழ்ச்செல்வி
25 அற்புதன் தமிழ்மலர்
26  அறிவன் தமிழ்வாணி
27  அறிவாற்றன்
தமிழ்விழி
28  அறிவு தமிழ்வேனி
29  அறிவழகன் தேன்மொழிதமிழரசி
 30 அறிவுநம்பி நித்திலா
31  அய்யாகண்ணு நுண்மதி
32  அய்யன்சாமி பவானி
 33 அனழேந்தி புகழியா
34  அண்ணாதுரை பூங்குழலி
35  அண்ணாமலை பூம்பாவை
 36 அன்பு மல்லிகா
 37 அன்புமணி மலர்விழி
38  அன்பரசன் மலரொளி
39 அன்புக்கரசன் யாழ்தேவி
40 அன்புச்செல்வன் யாழ்வேணி
41 அன்பழகன் யாழிசை
42 அன்பினியன் யாழினி
43 அன்பானந்தன் வளர்மதி
44 அடைக்கலநாதன் விண்ணகி
45 அதிர்துடியன் வெண்ணிலா
46 அமலன் வெண்பா
47 அம்பலவன் வெற்றிச்செல்வி
48 அம்பலவாணன் அமுதா
49 அம்பலக்கூத்தன் அமிழ்தமொழி
50 அரவிந்தன்  அறிவுமலர்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்