குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக என்ன செய்யலாம் தெரியுமா..?

Advertisement

Kulanthai Sali Irumal Neenga

புதியதாக ஒரு குழந்தை பிறந்தது என்றால் அதனை குறைந்தப்பட்சம் 3 வயது வரை ஆரோக்கியமாக வளரக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். ஏனென்றால் இத்தகைய பருவத்தில் அவர்கள் அவ்வளவாக பேச மாட்டார்கள். மேலும் இதை செய்தாலும் நமக்கு ஆபத்து என்று தெரியவும் தெரியாது. ஆகவே இப்படிப்பட்ட குணம் கொண்டு மழலை பேச்சினை பேசக்கூடிய குழந்தையை சரியான முறையில் பார்த்து கொண்டு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். இவ்வாறு நினைக்கும் பட்சத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் என இதுபோன்ற பிரச்சனைகளே அதிகமாக காணப்படும். அதிலும் குறிப்பாக சளி பிடித்தால் போதும் அதனுடனே இருமலும் சேர்ந்து வந்து விடும். மேலும் இரவு முழுவதும் தூக்கம் என்பது அவ்வளவாக இருக்காது. ஆகையால் இன்றைய பதிவில் குழந்தையின் சளி இருமை எவ்வாறு எளிய முறையில் குணப்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

குறிப்பு: குழந்தைகளுக்கு எந்த உணவு அல்லது மருந்துகள் கொடுக்க வேண்டும் என்றாலும் அதனை மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு சளி இருமல் குணமாக:

ஓமவல்லி இலையில் மெக்னீசியம், கால்சியம், புரோட்டீன், நார்சத்து, வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, பொட்டாசியம் மற்றும் கார்போ ஹைட்ரேட் என பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளது.

 குழந்தைக்கு சளி இருமல் குணமாக

ஆகையால் இந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் சளி, இருமல் குணமாகி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யும்.

ஓமவல்லி இலை- 1 கைப்பிடி அளவு 

முதலில் 4 அல்லது 5 ஓமவல்லி இலையை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயினை வைத்து கடாய் சூடானதும் அதில் இலையினை வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள்.

இப்போது சூடு செய்து வைத்துள்ள கற்பூரவல்லி இலையில் இருந்து சாறு பிழிந்து வடிகட்டி கொள்ளுங்கள். அவ்வளவு தான் குழந்தையின் சளி இருமலை குணப்படுத்த மருந்து தயார்.

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும் 

எத்தனை வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்:

 குழந்தை சளி இருமல் காய்ச்சல் குணமாக1 வயது பூர்த்தி ஆன பிறகே குழந்தைக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டும். அதேபோல் காலை நேரத்தில் 1 ஸ்பூன் என்ற கணக்கில் பல் துலக்கிய பிறகு இந்த மருந்தை கொடுக்க வேண்டும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement