உங்க குழந்தை தூங்க மாட்டிங்குதா.! அப்போ இது மாதிரி செய்யுங்க 10 நிமிஷத்துல தூங்கிடும்..

Advertisement

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி.?

பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் அதுபாட்டுன்னு தூங்கிவிட்டது. ஆனால் இன்றைய காலத்தில் மொபைலில் பாட்டை போட்டு விட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள் இதனால் குழந்தைகள் தூங்காமல் அலுத்து கொண்டே இருக்கின்றது. அதனால் இந்த பதிவில் அம்மாக்களுக்கு உதவும் நோக்கத்தில் குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

குழந்தைகளை தூங்க வைக்க குறிப்புகள்:

டிஸ்ஸு பேப்பர்:

குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன் பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்து வந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இது போல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கி விடும்.

நீரின் சத்தம்: 

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி

குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகின்றன. அதற்காக குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டாம். மாறாக தண்ணீரின் சத்தத்தை மொபைலில் பிளே செய்யலாம். இதனால் கேட்டவுடன் குழந்தைகள் சீக்கிரம் தூங்கி விடும்.

விளக்கு:

அறையின் விளக்கை அணைத்து விட வேண்டும். அதற்காக சுத்தமாக இருட்டாக இருக்க கூடாது. லைட்டா வெளிச்சம் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக என்ன செய்யலாம் தெரியுமா..?

தடவி கொடுக்க வேண்டும்:

குழந்தைகளின்  தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

தொட்டியில் போட்டு தூங்க வைப்பது:

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி

தொட்டியில் போட்டு குழந்தையை தூங்க வைக்க தெரியாத என்று கேட்காதீர்கள். தொட்டியில் போட்டு தூங்க வைக்கும் போது இருபுறமும் துணியை வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தபடி போட வேண்டும்.

தாலாட்டு:

தாலாட்டு பாடினால் குழந்தை அமைதியாக தூங்கி விடுவான். ஆனால் யாரும் தாலாட்டு படுவதில்லை, மொபைலில் தான் பாட்டை போடுகிறார்கள்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement