குழந்தைக்கு வாந்தி வயிற்றுப்போக்கு
வணக்கம் நண்பர்களே இன்று குழந்தைகள் நலன் பதிவில் தாய்மார்களுக்கு பயனுள்ள மருத்துவ குறிப்பை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே குழந்தைகள் என்றால் அதை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். குழந்தைகள் வயிற்றில் இருக்கும் வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் கூட, அந்த குழந்தைகள் பிறந்தவுடன் எல்லா விதமான நோய்களும் வருகின்றன. குழந்தைகளுக்கு பாதிப்பு வராத உணவுகளை தாய்மார்கள் உட்கொள்ள வேண்டும்.
அதேபோல் குழந்தைகள் இருக்கும் இடத்தையும் தூய்மையாக வைப்பது அவசியம். இது போன்ற விஷயங்களை கடைபிடிக்காத காரணங்களினால் தான் குழந்தைகளுக்கு கிருமிகளின் தாக்கத்தினால் காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு வரும் வாந்தி, பேதி போன்ற பிரச்சனையில் இருந்து நீங்க ஒரு அருமையான மருத்துவ குறிப்பை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பிறந்த குழந்தைகளுக்கு நெஞ்சு சளி எளிதில் குணமாக இதை தெரிந்துகொள்ளுங்கள் |
குழந்தைக்கு வாந்தி வயிற்றுப்போக்கு நீங்க :
குழந்தைக்கு ஏற்படும் வாந்தி, வயிற்று போக்கு, குடித்த தாய்ப்பாலை கக்குதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தீர்வு பெற துளசி இலைகள் மட்டும் இருந்தாலே போதுமானதாகும். பொதுவாகவே இந்த துளசி இலைகள் பல எண்ணற்ற மருத்துவங்களுக்கும் , அழகு குறிப்புகளுக்கும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. இன்னும் பலரது வீட்டில் துளசி இலைகள் புனிதமானதாக இருப்பதால் துளசி மடங்கள் கட்டியும் வணங்கி வருகின்றன.
பொதுவாகவே நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு துளசி இலைகளை தினமும் காலையில் சிறிதளவு சாப்பிட்டு வந்தாலே நோய்கள் அனைத்தும் பறந்து போகும். இதில் அதிகமான மருத்துவங்கள் இருக்கின்றன. எனவே இதனை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் உடனே நீங்க வேண்டுமென்றால் துளசி விதைகளை எடுத்து கொண்டு அதை மெலிதாக அரைத்து பசும்பாலில் கலந்து கொள்ள வேண்டும். இதை பாலாடையால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் உடனடியாக வாந்தியும், வயிற்றுப்போக்கும் நீங்கிவிடும்.
ஒரு சில குழந்தைகள் தாய்ப்பால் கொடுத்தவுடன் பாலை வாந்தி எடுத்துக்கொண்டே இருக்கும். இது போன்ற நேரங்களில் துளசியை எடுத்துக்கொண்டு அதை சாறாக பிழிந்து சிறிதளவு தேன் சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிதளவு கொடுத்தால் போதுமானது. இதனால் வாந்தி எடுப்பதும் நின்று குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதற்கும் உதவியாக இருக்கிறது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |