வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆண் குழந்தை பெற்றெடுத்தால் தாயின் ஆயுள் குறையுமா..!

Updated On: May 28, 2024 1:00 PM
Follow Us:
male child
---Advertisement---
Advertisement

ஆண் குழந்தையினால் தாயின் ஆயுள் குறையுமா.?

ஒரு பெண் தாயாகிறாள் என்றால் அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அதுவும் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தையாக (male child) இருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். இருப்பினும் ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது என்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

ஆண் குழந்தை பெற்றெடுத்தால் தாயின் ஆயுள் குறையுமா..?

சரிவாங்க அப்படி என்ன அந்த ஆய்வு கூறுகின்றது என்று இவற்றில் நாம் காண்போம்.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் இது பற்றிய சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில், ஆண் குழந்தைகளைப் (male child) பெற்றெடுக்கும் பெண்கள் சுமார் 7% சதவீதம் பேர் குறைந்த நாட்களிலேயே உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதில், தாய்மார்களின் உடல் ரீதியான பிரச்சனைகளும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகளைச் சுமப்பதை விட ஆண் குழந்தைகளைச் சுமப்பது கடினம் என்றும், ஆண் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களுக்குக் கூடுதல் சக்தி தேவைபடுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே இது போன்ற சில விஷயங்கள் மூலம் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது குறித்து, பின்லாந்தில் உள்ள துர்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சாமுளி ஹெல்லே என்பவர் இது முற்றிலும் முடிந்த முடிவு. இதற்கான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இதுவே முழுமையான முடிவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> பொதுநலம்.com

 

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now